உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீண்ட நாட்களாக தேடப்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி

நீண்ட நாட்களாக தேடப்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: இந்திய ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசாருடன் நடந்த மோதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவனை கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தேடி வந்தனர். அவன் பதுங்குமிடம் குறித்து உளவுத்துறையினர் அளித்த தகவல் அடிப்படையில், உதம்பூர் மாவட்டத்தின் வசந்த்கர்க் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு ' ஆப்பரேஷன் பிகாலி' என பெயர்சூட்டப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o3o4jk47&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதனை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மோதல் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 26, 2025 21:33

மொத்தமா அங்கிருக்கிற பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளுங்கப்பா. அங்குள்ள மக்கள் நிம்மதியா வாழட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை