உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்தூர் தொடர வேண்டும்: துணை ஜனாதிபதி விருப்பம்

ஆபரேஷன் சிந்தூர் தொடர வேண்டும்: துணை ஜனாதிபதி விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பனாஜி: '' ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தேவைப்படுகிறது. அது தொடர வேண்டும்,'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.கோவா கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாரதம் மாறிவிட்டது. தற்போது நம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கதாக உள்ளது. நமக்கு தொல்லை கொடுக்கும் அண்டை நாட்டிற்கு மட்டும் அல்லாமல், உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், பயங்கரவாதம் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்படும் போது அவர்கள் வேட்டையாடப்படுவார்கள். ஆபரேஷன் சிந்தூர் தேவைப்படுகிறது. அது தொடர வேண்டும். பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.ஆபரேஷன் சிந்தூரின் போது, துல்லியமாக தாக்குதல் நடத்திய நமது ஆயுதப்படையினரின் திறமையை பார்த்த சர்வதேச சமுதாயம் அங்கீகாரம் அளித்துள்ளது. பாகிஸ்தானில் சடலங்கள் எடுத்துச் செல்லப்படுவதால், யாரும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து யாரும் ஆதாரம் கேட்கவில்லை. இவ்வாறு துணை ஜனாதிபதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

K.n. Dhasarathan
மே 22, 2025 21:23

சரியாக சொன்னார் துணை ஜனாதிபதி யாரை கேட்டு தாக்குதலை நிறுத்தினார்கள் ? பாகிஸ்தானை அப்படியே மூட்டை பூச்சியை போல நசுக்கி இன்னும் நுறு வருடங்களுக்கு எழ முடியாதபடி செய்யணும். அப்படி செய்யாததால் தான் இப்போது மறுபடியும் தாக்குதலை செய்கிறார்கள், இனி மிக மிக கடுமையான தாக்குதலை சேய்யவேண்டும்.


Ramesh Sargam
மே 22, 2025 20:42

ஆபரேஷன் சிந்தூர் பாகம் ரெண்டு, பாகம் ஒன்றைவிட மிக மிக கடுமையாக இருக்கவேண்டும். துணை ஜனாதிபதியின் விருப்பம் சரியானதுதான்.


Karthik
மே 22, 2025 20:28

ஆம் சரியாக சொன்னீர்கள்.. சிந்தூர் தொடர வேண்டும், அது தற்போதைய தேவை. தவிர்க்க முடியாத தேவை.


veeramani hariharan
மே 22, 2025 19:30

Rightly said. Dy.Rashtrapathy. Ourall Indians wish also like that only. We dont want Pakistan in world map


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை