உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே 10க்கு பின்பும் நீடித்தது ஆப்பரேஷன் சிந்துார் ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி பேச்சு

மே 10க்கு பின்பும் நீடித்தது ஆப்பரேஷன் சிந்துார் ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி பேச்சு

புதுடில்லி :“இந்தியா - பாகிஸ்தான் மோதல், மே 10ம் தேதிக்கு பின்னரும் நீடித்தது,” என, ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்., 22ல் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர். நடவடிக்கை இதற்கு, பாகிஸ்தானை தலைமையிடமாக வைத்து செயல்படும் லஷ்கர் - இ - தொய்பாவின் கிளை அமைப்பான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது. பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக, மே 7ல், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நம் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், பயங்கரவாதிகளின் ஒன்பது தளங்கள் தகர்க்கப்பட்டன. லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில் பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது. நம் ராணுவத்தினரும் பதிலடி தந்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டை, மே 10ல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் டைனி தில்லோன் எழுதிய, 'ஆப்பரேஷன் சிந்துார்: தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் இந்தியாஸ் டீப் ஸ்டிரைக்ஸ் இன் பாகிஸ்தான்' புத்தக வெளியீட்டு விழா டில்லியில் நேற்று நடந்தது. அதில், பங்கேற்று புத்தகத்தை வெளியிட்ட நம் ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைகள் தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டார். ஒருங்கிணைப்பு 'முப்படைகளின் ஒருங்கிணைப்பு' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: ராணுவ நடவடிக்கையின் வரலாற்றை மட்டும் இந்த புத்தகம் சொல்லவில்லை. மாறாக, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது ராணுவத்துக்கு வழங்கப்பட்ட முழு சுதந்திரம் மற்றும் அதன்பின் நடந்த நடவடிக்கைகளை ஆழமாக விவரிக்கிறது. ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, நம் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை வீரர்கள் மேற்கொண்டதே வெற்றிக்கு காரணம். இந்தியா - பாக்., இடையிலான போர், மே 10ம் தேதியுடன் முடிவுக்கு வரவில்லை. பல முடிவுகள் எட்டப்படும் வரை, அது நீண்ட காலம் நீடித்தது. அதற்கான காரணங்களை இங்கே பகிர்ந்து கொள்வது கடினம். எல்லைக்கோட்டில் நடத்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் தாக்கம் விரைவில் தெரியவரும். தாக்குதலுக்கு பின்னும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத செயல்கள் தொடர்கின்றன. எல்லையின் ஊடுருவல் முயற்சிகள் இன்றும் நடக்கின்றன. ஜி.எஸ்.டி.,யில் சமீபத்தில் மேற் கொள்ளப்பட்ட மறுசீரமைப்புகள், ராணுவ படைக்கு கூடுதல் பலத்தை தரும். ட்ரோன்கள் மீதான வரி குறைப்பு, பெரிய அளவிலான கொள்முதலுக்கு வழிவகுக்கும். சிறிய நிறுவனங்கள் கூட ஊக்குவிக்கப் படும். ராணுவத்தின் நவீனமயமா க்கலை விரைவுபடுத்துவதற்கு, ஜி.எஸ்.டி., சீரமைப்பு உதவும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Priyan Vadanad
செப் 07, 2025 02:40

இவரை இப்படி எழுத எது உந்தி தள்ளியது? புதுசு புதுசா கிளம்புது. முடிந்து விட்டது என்று செய்தி வந்தது. தொடர்ந்தது என்று செய்தி வருகிறது. ஒன்றுமே புரியவில்லை. நல்லதாக எல்லாம் நடந்தால் சரி.


karupanasamy
செப் 07, 2025 05:51

டாஸ்மாக் தொறந்தாச்சு போயி மூச்சுமுட்ட குடிச்சிட்டு முட்டுசந்துல குப்புற படு.


சமீபத்திய செய்தி