மேலும் செய்திகள்
நாட்டின் சுயாட்சியை அடகு வைக்க முடியாது; காங்., எம்பி சசி தரூர்
1 hour(s) ago | 1
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
2 hour(s) ago | 1
ஹைதராபாத்: நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஹைதராபாத் விமான நிலையத்தில் பயணிகள் குழப்பம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வாரணாசி உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் இன்று திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டன. கம்ப்யூட்டரில் செக் இன் அமைப்புகளில் நிகழ்ந்த இந்த கோளாறால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. உலகளாவிய அளவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சேவை செயலிழப்பு காரணமாக விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாரணாசி விமான நிலையத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.வாரணாசியை போன்றே ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தங்கள் விமானம் எப்போது புறப்படும் என்று தெரியாமல் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், ஒரு கட்டத்தில் எதிர்ப்பு குரல்களை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர்களை அமைதிப்படுத்திய விமான நிலைய ஊழியர்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினர். வாரணாசி, ஹைதராபாத் போன்றே பெங்களூரு, டில்லி விமான நிலையங்களிலும் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடில் தாமதம் நிலவியது. பெங்களூருவில் மொத்தம் 42 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. கடைசி நேர அறிவிப்புகளை தெரிந்து கொண்டு பயணங்களை திட்டமிடுமாறு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.
1 hour(s) ago | 1
2 hour(s) ago | 1