உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் கமிஷனுக்கு வாய்ப்பு!

தேர்தல் கமிஷனுக்கு வாய்ப்பு!

பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்கிறது. இது குறித்து நிறைய கேள்விகள் உள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் அரசின் அழுத்தத்திற்கு உள்ளாகவில்லை என்பதை நிரூபிக்க, தேர்தல் கமிஷனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.சுப்ரியா சுலேலோக்சபா எம்.பி., தேசியவாத காங்., சரத்பவார் அணி

ரவுடித்தனம் செய்வதா?

உயர் கல்வி துறையை காவிமயமாக்க முயற்சிக்கும் கவர்னரை கண்டித்து, கேரள பல்கலைகளில் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினர் நடத்தியது போராட்டமல்ல; ரவுடித்தனம். மாணவர்கள், பேராசிரியர்களை தாக்கி உள்ளனர். போலீசாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. சதீஷன் கேரள எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்

கவனம் ஈர்க்கவே போராட்டம்!

மத்திய பா.ஜ., அரசு, தொழிலாளர் மற்றும் விவசாய விரோத போக்கை கொண்டுள்ளது; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. மக்கள் பணம் செலவிடுவது குறைந்துள்ளது. தொழில்களின் விற்பனை சரிந்துள்ளது. இது தொடர்பாக பிரதமரின் கவனத்தை ஈர்க்கவே, வர்த்தக சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தன.ரந்தீப் சிங் சுர்ஜேவாலாபொதுச்செயலர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை