உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா அவைத்தலைவருக்கு எதிராக இண்டியா கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம்

ராஜ்யசபா அவைத்தலைவருக்கு எதிராக இண்டியா கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராஜ்யசபா அவைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ள ' இண்டியா' கூட்டணி கட்சிகள், அதனை அவைச் செயலாளரிடம் தாக்கல் செய்துள்ளன.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளில் இருந்தே, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்கு தொடர்பான பிரச்னையை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் இரு சபைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0d0wxd2y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா தொடர்புடைய அமைப்புக்கு இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் வழங்கும் நிதியுதவி குறித்து விவாதிக்க வேண்டும் என, ஆளும் தரப்பு கூறி வருகிறது. இன்றும் அமளி காரணமாக பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டது. பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தின. இந்நிலையில், ராஜ்யசபா அவைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை, ராஜ்யசபா செயலாளரிடம் ' இண்டியா ' கூட்டணி கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'இண்டியா' கூட்டணி கட்சிகள் வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்துள்ளன. ராஜ்யசபா அவைத் தலைவர் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார். ' இண்டியா' கூட்டணிக்கு இது வேதனையான முடிவு. ஆனால், பார்லிமென்ட் ஜனநாயகத்தின் நலனுக்காக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டி இருந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவைச் செயலாளரிடம் தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக காங்கிரசின் சக்திசிங் கோலி கூறியதாவது: எதிர்க்கட்சியினரை நோக்கி ஆளுங்கட்சியினர் கோஷம் போடுவதால், பார்லிமென்ட் இயங்கவில்லை. பார்லிமென்டை செயல்பட வைப்பது ஆளுங்கட்சியினரின் கடமை. எங்களின் போராட்டம் என்பது அரசின் கொள்கைக்கு எதிராது. ஆனால், அவைத்தலைவர் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். எங்களை அவரை அனுமதிக்கவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது. இன்று நட்டா பேசும்போது, அவரது மைக் அணைக்கப்படவில்லை. யாரும் அவரை தடுக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சியை சேர்ந்த பிரமோத் திவாரி பேசத் துவங்கிய ஓரிரு வினாடிகளில் அவரது மைக் அணைக்கப்பட்டது. அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இண்டியா கூட்டணி தலைவர்கள் கையெழுத்து போட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.திரிணமுல் காங்கிரஸ் தலைவர் சகாரிகா கோஷ் கூறியதாவது: நமது அரசியலமைப்பு உரிமைகளைப் பின்பற்றி, பார்லிமென்ட் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுத்துள்ளோம். எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதி வழங்கப்படுவது இல்லை என்றார்.அக்கட்சியின் மற்றொரு தலைவர் சுஷ்மிதா தேவ் கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்தின்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. முக்கிய பிரச்னைகள் குறித்து பேச அனுமதி வழங்கப்படுவது இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Raj S
டிச 11, 2024 00:36

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆகும் செலவை யாரு அந்த தீர்மானத்துல தோக்கறாங்களோ அவங்க கிட்ட பத்து மடங்கா வாங்கினா எல்லாம் சரியாய் நடக்கும்


C.SRIRAM
டிச 10, 2024 21:34

முதலில் இந்த பொருந்தா கூட்டணியின் பெயரை மாற்ற வேண்டும் . நாட்டின் பெயர் எல்லாருக்கும் உரியது . அதை எப்படி இந்த வெட்டி கூட்டணி வைத்துக்கொள்ளமுடியும் ?. உச்ச நீதி மன்றம் தாமாக முன் வந்து இதை விசாரித்தால் நல்லது.


Ramesh Sargam
டிச 10, 2024 20:56

எதிர்கட்சியினரின் வேலையே அவையில் ரகளை செய்வது, வெளிநடப்பு செய்வது, அங்குள்ள உணவகத்தில் வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு வீடு திரும்புவது. மீண்டும் மறுநாள் அவைக்கு வந்து அப்படியே செய்வது. மக்கள் வரிப்பணம் இப்படி எல்லாம் வீண் ஆகலாமா....? இவர்களை கேட்பாரில்லையா...?


Kasimani Baskaran
டிச 10, 2024 19:35

ஓவராக ஆடும் நாலுபேரை நிரந்தரமாக ஓராண்டுக்காவது பதவி நீக்கம் செய்ய வேண்டும். இல்லை என்றால் ஐநாவில் கூட மனு கொடுப்பார்கள்.


Ramiah Selvarajan
டிச 10, 2024 21:13

ஆம், அந்த 4 பெயர் மோடி, அமித் ஷா, ஓம்பிர்லா மற்றும் ஜெகதீப் தங்கர்.


M Ramachandran
டிச 10, 2024 18:05

நாட்டை சீரலை நினைக்கும் கூட்டம்.


GMM
டிச 10, 2024 18:01

ராஜ்ய சபை தலைவருக்கு எதிராக உரிய காரணம் சொல்ல முடியாமல் , எதிர் கூட்டணியின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு மோசமான செயல். மக்களுக்கு இக் கட்சிகள் மீது மேலும் நம்பிக்கை குறையும்.


sundarsvpr
டிச 10, 2024 17:00

நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கும் என்று தெரிந்து கொண்டுவருவது தவறு. மீண்டும் அவை தொடர்ந்தால் ராஜ்ய அவை தலைவர் மாறுபடுவாரா? மாட்டார். முதலில் உங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்துஎடுங்கள். ஆனால் முடியாது. தி மு க ராகுலை மட்டும் ஆதரிக்கும். மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். ஒரே வழி எதிர் கட்சிகள் எல்லோரும் பதவி விலகி மக்களை அணுகி வெற்றிபெறவேண்டும்.


Dharmavaan
டிச 10, 2024 16:28

டங்கர் நேர்மையானவர் எதிர்க்கட்சி அட்டூழியத்துக்கு அனுமதி இல்லை என்பதால் இந்த கிறுக்கு /குறுக்கு வழி கண்டனத்துக்குரியது


சாண்டில்யன்
டிச 10, 2024 18:19

ஒரு விஷயத்தை பேச அனுமதி கேட்பதில் என்ன உள்ளது என விளக்கமாக சொன்னால் நாமும் தெரிந்து கொள்ளலாம். நாடாளுமன்றம் என்பது பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்குத்தான் என எண்ணிக் கொண்டிருக்கிறோம். தமிழக உறுப்பினர்கள் பேச எழுந்தாலே கத்தி கூச்சலிடும் ஆளுங்கட்சினர் செயல்களுக்கு என்ன பேர்? உதாரணத்துக்கு சென்னை மெட்ரோ தற்போது நடை பெரும் இரண்டாம் கட்டத்துக்கு நிதி கேட்டால் கோபாவேசமாக எழுந்து பல ஆண்டுகள் முன்னால் முதல் கட்டத்துக்கு ஒதுக்கிய நிதி விபரங்களை சொல்கிறார் நிதியமைச்சர் எங்கள் திட்டத்தை ஏற்றால் மட்டுமே கல்வி நிதி தரப்படும் என்பது எந்த சட்டத்தின் அடிப்படையிலாம் என்பதை சொல்ல வேண்டும்


Dharmavaan
டிச 10, 2024 21:03

கேட்பவன் கெட்ட எண்ணம் அவை நடவடிக்கையை சீர்குலைக்க மோடியை சிறுமை படுத்த எனவே அனுமதி மறுப்பு .மற்றபடி மக்கள் நலன் அல்ல அறிவுள்ளவனுக்கு புரியும்...


அப்பாவி
டிச 10, 2024 16:16

அந்த 500 ரூவா கட்டை அப்புடியே அமுக்கிட்டாங்களே கோவாலு.


Duruvesan
டிச 10, 2024 18:12

மூர்க்ஸ் எரியுதா? நீ கேட்டாலும் சிங்குவி குடுக்க மாட்டம்


சாண்டில்யன்
டிச 10, 2024 20:26

IT WAS PROVED BEYOND DOUBT THAT TO BE A CONCOCTED CASE BY THE RULING BENCH TO DIVERT THE ATTENTION OF OPPOSITION MEMBERS OF PARLIAMENT.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை