உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லியில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு

பார்லியில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பார்லிமென்டின் இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆப்பரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி தொடர்ந்து அவையை முடக்கி வருகின்றனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். உரிய ஆதாரங்களுடன் நேரில் சந்திக்குமாறு தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், பார்லிமென்ட் வழக்கம் போல இன்று கூடிய நிலையில், கேள்வி நேரத்தின் போது, பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், லோக்சபாவை பிற்பகல் வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். தொடர்ந்து அமளி தொடரவே நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.அதேபோல, ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினரின் இந்த செயலைக் கண்டித்த துணை தலைவர் ஹரிவன்ஷ், 'தற்போதைய கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியின் காரணமாக, 56 மணி நேரம் 49 நிமிடங்களை நாம் இழந்து விட்டோம்,' என்று கூறினார். தொடர்ந்து, ராஜ்யசபாவும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ram Siri
ஆக 09, 2025 21:10

உலகின் மிக பெரிய லூசாக டொனல்ட் டிரம்ப்


Ganesh
ஆக 08, 2025 15:49

Our Vikram kamal Hassan ji participated in rajyasabha discussion?


M. PALANIAPPAN, KERALA
ஆக 08, 2025 15:44

கூச்சல் கும்மாளம் போடுவதை தவிர வேறு என்ன தெரியும். கேன்டீனில் நன்றாக சாப்பிட தெரியும் ஆக்க பூர்வமாக எதையாவுது செய்யுங்கள்


Ganapathy
ஆக 08, 2025 13:52

பாஜக ராகுலுக்கு பயப்புடுது இல்லை இந்த இடதுசாரி மீடியாவுக்கு பயப்புடுது...இப்படிப்பட்ட அதிகாரமே இல்லாத வெறும்ன பல்லை காட்டும் சபாநாயகரால் என்ன பயன்? நமது வரிப்பணம் மொத்ததுல பாழ்.


Ganapathy
ஆக 08, 2025 13:39

கலவையில் அண்ணாமலை தோத்தபோதும் பலர் பெயர்கள் வோட்டர் லிஸ்ட்ல இல்லியே. அப்ப ராகுலு வாயே தொறக்கல. ஏன் கள்ளத்தனமாக திமுக ஜெயிக்கணும்குற சதி எண்ணம்தானே காரணம்?


D Natarajan
ஆக 08, 2025 13:29

சபாநாயகர் மிகவும் மென்மையாக நடந்து கொள்கிறார். மிக மோசமான பிஜேபி நடைமுறை. 20 எதிர்க்கட்சி மெம்பர்களை பார்லியமென்ட்டை விட்ட தூக்க வேண்டும். அல்லது பார்லியமென்ட்டை களைத்து விடவேண்டும் . மிக மோசமாக பிஜேபி இந்த நடத்தையை கையாள்கிறது.


Ganapathy
ஆக 08, 2025 13:29

உண்மையில் ஜார்கண்ட் முதல் பீஹார்வரை இன்று கள்ளக்குடி உஸ்லீம் ரோஹிங்கியாக்களை கள்ளத்தனமாக லாலு பார்ட்டி பணம் வாங்கிக் கொண்டு எல்லா ஆதாரங்களையும் கள்ளத்தனமாக செய்து குடியேற்றியுள்ளனர். இவர்கள் நமது வரிப்பணத்தில் வேலை செய்யாமல் ஹிந்துக்களுக்கு எதிராக குற்றங்கள் புரிந்து சுகமாக வாழ்கின்றனர். இவர்கள் வேலையே லாலு பார்ட்டிக்கு ஓட்டு போடுவதுதான்.


Jack
ஆக 08, 2025 13:17

பாராளுமன்றத்தில் நடுநடுவே குத்துப்பாட்டு போடலாமா ..அமளி குறையும்


Santhakumar Srinivasalu
ஆக 08, 2025 13:05

தொழிலாளர் வேலைக்கு போகவில்லை என்றால் சம்பளம் இல்லை! அதே போல் பார்லிமெண்டை அமலியால் முடக்கினால் அன்றைய அலவன்ஸ்/சம்பளம் கிடையாது என்று சட்டம் வேண்டும்! மக்களின் வரிப்பணத்தில் பார்லிமெண்ட் சென்று சலுகை விலையில் உணவுகளை சாப்பிட்டு உறுப்படியாக எதுவும் செய்யாத ஜென்மங்கள்!


P.M.E.Raj
ஆக 08, 2025 13:03

எதிர் கட்சிகள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார்கள். நாட்டின் நலனில் கொஞ்சம்கூட அக்கறையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். வாக்காளர் திருத்தம் நடவடிக்கைளில் இரட்டை வேடம் போடுகிறான் ராகுல். மக்கள் இவர்களின் சூய்ச்சியை புரிந்துகொள்ளவேண்டும். எதிர்க்கட்சிகள் எதிரி நாட்டுக்குத்தான் சாதகமாக இருக்கிறார்கள்.


புதிய வீடியோ