உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்ஜெட் விவகாரத்தில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்: மத்திய அமைச்சர்

பட்ஜெட் விவகாரத்தில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்: மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகளை பேசாமல், அதில் அரசியல் செய்வதாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.மத்திய பட்ஜெட் கடந்த ஜூலை 23ல் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பீஹார், ஆந்திரா உள்ளிட்ட பா.ஜ., கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறி இண்டியா கூட்டணியினர் நேற்று (ஜூலை 24) பார்லி., வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், இதே விவகாரத்தை முன்னிறுத்தி லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j7aumbdn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பட்ஜெட் பற்றி சில எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிய கருத்துகளை கண்டிக்கிறேன். பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகளை பேசாமல், அதில் அரசியல்தான் செய்கிறார்கள். மக்களின் தீர்ப்பை அவமதித்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. பட்ஜெட் மீதான விவாதம் நல்லதாகவும், அர்த்தமுள்ளதாகவும் நடைபெறுவதை நாடு பார்க்க விரும்புகிறது. கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேசிய விதம், பார்லி.,யின் கண்ணியத்தை குறைத்து, அவையை அவமதிப்பதாக உள்ளது. பட்ஜெட்டில் உள்ள நல்ல அம்சத்தை கூட குறிப்பிடாமல் தவறாக பேசுகின்றனர். பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகள், இட ஒதுக்கீடு, பெண்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதனை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை என்றால், மக்கள் அவர்களை தண்டிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mariadoss E
ஜூலை 26, 2024 19:33

கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் மத்திய பாஜக அரசு என்பதற்கான சான்றாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்துக்கும், குஜராத்துக்கும் தலா ரூ.400 கோடிக்கு மேல் தந்து தாராளம் காட்டியிருக்கிற மத்திய அரசு, தமிழகத்துக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஓரவஞ்சகம் தானே....


Venkat
ஜூலை 25, 2024 14:29

அவர்களுக்கு தெரிந்ததை மட்டுமே செய்வார்கள். நல்லது என்றொல் என்ன என்று கேக்கும் இவர்களுக்கு வேற என்ன தெரியம்


அப்புஜி
ஜூலை 25, 2024 13:29

ஆந்திராவுக்கும், பிஹாருக்கும் அக்ளிக். குடுத்தால் தானெட் அமைச்சர் பதவி மிஞ்சும். அதுதான் தேஷ்பக்தி ஹைன்


ராஜ்
ஜூலை 25, 2024 12:26

ஆமாம் அப்படித்தான் செய்வோம் தமிழக மக்கள் மத்திய அரசை புறக்கணித்தனர் எனவே மத்திய அரசு தமிழக மக்களை புறக்கணிப்போம். யார் ஆதரவு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அள்ளிக் கொடுப்போம்.


Apposthalan samlin
ஜூலை 25, 2024 12:03

யார் அரசியல் செய்கிறார்கள் ? ஆந்திராவுக்கு பிஹாருக்கும் அள்ளி கொடுத்து பிஜேபி அரசை காப்பாற்ற நீங்கள் தான் அரசியல் செய்கிறீர்கள்


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 11:10

பட்ஜெட்டில் பிஜெபி ஆளும் பெரும்பாலான மாநிலங்களின் பெயர் கூட இல்லை. அவர்கள் போராட வில்லையே.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை