உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குறைதீர் முகாமில் தரப்படும் மனுக்கள் விரைந்து தீர்வு காண உத்தரவு

குறைதீர் முகாமில் தரப்படும் மனுக்கள் விரைந்து தீர்வு காண உத்தரவு

பெங்களூரு: ''சமீபத்தில் விதான்சவுதா முன் பகுதியில் நடந்த, முதல்வரின் மக்கள் குறைதீர்வு முகாம் வெற்றி பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களை கவனிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, முதல்வரின் தலைமை செயலர் அதிக் உத்தரவிட்டார்.பெங்களூரு விதான் சவுதாவின் மாநாடு ஹாலில் அதிகாரிகளுடன், நேற்று முதல்வரின் தலைமை செயலர் அதிக் கூட்டம் நடத்தினார். அவர் பேசியதாவது:முதல்வர் நடத்திய, மக்கள் குறைதீர்வு முகாம், அமோக வெற்றி அடைந்தது. இதுகுறித்து, முதல்வர் பாராட்டினார். வரும் நாட்களில் இதற்கு மேலும் மெருகூட்டி, முகாம் நடத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார். வரும் நாட்களில் மண்டல அளவில், மக்கள் குறை தீர்வு முகாம் நடத்தப்படும்.முதற்கட்டமாக கலபுரகியில் முகாம் நடக்கும். இந்த முகாமில் மாவட்ட கலெக்டராக நேரடியாக பங்கேற்கும்படி உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் விதான்சவுதா வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு முகாமில் 14,685 மனுக்களில், 4,321 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பிரச்னைகளுடன் வரும் மக்கள் மீது, அக்கறை காண்பிக்க வேண்டும். தங்கள் பிரச்னைகளை தீர்ப்பர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். விதிமுறைப்படி தீர்த்து வைக்க முடியாத பிரச்னைகள் இருந்தால், இது பற்றி எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மக்கள் தொடர்ந்து, அதே பிரச்னையுடன், குறைதீர்வு முகாமுக்கு வரக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை