உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.,15 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் திகார் சிறையில் 2ம் எண் அறையில் அடைக்கப்பட்டார்.புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரியிருந்தது. இதனையடுத்து ஏப்ரல் 1ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.அமலாக்கத்துறையின் காவல் இன்றுடன் முடியும் நிலையில், இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.,15 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2ம் எண் அறை ஒதுக்கப்பட்டது. சிறையில் பகவத் கீதை மற்றும் புத்தகங்களை எடுத்து செல்ல அனுமதிக்குமாறு கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.

என்னென்ன வசதிகள்?

டில்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைக்கவுள்ள வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, * அவருக்கு மெத்தையுடன் கூடிய படுக்கை, காலை 6:30 மணிக்கு 'டீ' கொடுக்கப்படும். * இவரது சிறைக்கதவு சூரிய உதயத்திற்கு பின்னர் திறந்துவிடப்படும். * மதிய உணவு காலை 10:30 முதல் 11 மணி வரை வழங்கப்படும். * பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சிறைக்கதவு மூடப்படும். * மாலை 3:30 மணிக்கு டீ, இரண்டு பிஸ்கட்கள் கொடுக்கப்படும். * மீண்டும் சூரிய மறைவுக்கு பின்னர் சிறைக்கதவு மூடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

palaniswami
ஏப் 02, 2024 11:17

Kejrival of AAP, CM is sent to jail,but a the same time IT dept decided not to take any action on Congress leaders till Lokshaba poll, why and how ? If law and order is changed depending on persons/party, people will lose faith in justice


MARUTHU PANDIAR
ஏப் 01, 2024 22:36

அத்துடன் இவன் கைவசம் உள்ள என்ஜிஓக்கள் பணத்தை அள்ளிக் குவிக்கின்றனவாம்+++அரசியல் க துத்தில் ஒரு தேசத் துரோகியை தயார் செய்து நுழைத்து அரசியல் ரீதியாக எப்படியெல்லாம் ஜனநாயகத்தை பயன் படுத்தி நாட்டை சீரழிக்க முடியுமோ அதில் அமேரிக்கா வெற்றி கண்டுள்ள இத்தருணத்தில் இவன் மாட்டியுள்ளான்+++பிரதமர் மோடி அமெரிக்காவிடம் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது, ஏனென்றால் அவன் எந்த லெவலுக்கு செல்ல தயங்க மாட்டான்+++எண்ணெய் வளத்தை சுரண்டுவதற்காக ஈரானின் நாட்டுப்பற்று மிகுந்த பிரதமர் மோசஸாடிப்பை அதிகாரத்திலிருந்து இறக்க இந்த பாதகர்கள் செய்தது நினைவுக்கு வருகிறது+++நம் நாட்டு தேர்தலையும் சீர் குலைக்க தயங்க மாட்டார்கள் என்கிறார்கள்


MARUTHU PANDIAR
ஏப் 01, 2024 22:26

இவன் அமெரிக்க சிஐஏ வின் ஏஜென்ட் என்பது இப்போது அப்பட்டமாக தெரிந்து விட்டது+++++இவநை நம்பி அமேரிக்கா பல மில்லியன் டாலர்களை இறக்கியுள்ளதாம்இந்தியாவை எப்படியெல்லாம் முடியுமோ அப்படி எல்லாம் சீர்குலைக்க+++இவன் முன்னின்று நடத்திய போலி விவசாயிகளின் போராட்டமே இதற்கு சாட்சி++=நீதி மன்றத்திலே இவன் பிரதமர் மோடியை கண்ட படி வசை பாடுகிறான் என்றால் ,ஒன்பது முறை சம்மனை உதாசீனப் படுத்துகிறான் என்றால் இவன் பின் புலத்தில் எப்படிப்பட்ட சக்தி உள்ளது என்பது புரிய வில்லையா?


குமார் சென்னை
ஏப் 01, 2024 19:58

கருணாநிதி போல விஞ்ஞான முறை ஊழல் செய்திருந்தால் தப்பித்து இருக்கலாம். ஊழல் செய்து மாட்டாமல் இருக்க விடியலிடம் கற்றுக் கொள்ள வேண்டும் ?


Jamal Mohamed
ஏப் 01, 2024 19:46

ஆம் ஆத்மி கட்சியை நேரில் சந்திக்க திராணி இல்லாதவர்களின் செய்யும் சதித்திட்டம் கெஜ்ரிவால் மீண்டும் ஜெயிப்பார்


A1Suresh
ஏப் 01, 2024 19:27

திராவிட அமைச்சர்கள் மட்டுமே ஏனிப்படி சிறை செல்வதில்லை ? சுப்ரீம் கோர்ட்டுடன் ஒருவேளை கூட்டாக இருக்குமோ ?


Godfather_Senior
ஏப் 01, 2024 18:17

நல்லதே நடக்கும் இனி பொய் சொல்லி ஒட்டு வாங்கவே முடியாது ஏனென்றால் தேர்தல் பிரச்சாரத்துக்கு போகமுடியாதபடி உள்ளே வச்சது தேச நன்மைக்கே ஆம் ஆத்மி அம்பேல் ஆகி சிறையில் நெடுங்காலம் இருக்க நேரிடும்


nagendhiran
ஏப் 01, 2024 16:43

சம்மனுக்கு ஆஜர் ஆகாமல்"இருந்தால் என்ன?


krishna
ஏப் 01, 2024 16:10

ENNA ENNA VASADHIGAL.AAHA IDHA PADICHA GOLD MUDI KONDAADUVAAR.


krishna
ஏப் 01, 2024 16:02

MY HUSBUND SINGAM KEJRIWAL WIFE


மேலும் செய்திகள்





புதிய வீடியோ