தெரு நாய்களுக்கு உணவிடும் திட்டத்தை விஸ்தரிக்க உத்தரவு
பெங்களூரு: தெரு நாய்களுக்கு உணவிடும் திட்டத்தை, 28 தொகுதிகளுக்கும் விஸ்தரிக்கும்படி, பெங்களூரு மாநகராட்சி கால்நடை பிரிவு சிறப்பு கமிஷனர் சுரள்கர் விகாஸ் கிஷோர் உத்தரவிட்டார்.பெங்களூரு மாநகராட்சி கால்நடை பிரிவு சார்பில், கேபிடல் ஹோட்டலில் நேற்று கருத்தரங்கு நடந்தது. இதில், சுரள்கர் விகாஸ் கிஷோர் பேசியதாவது:தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் திட்டம், சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் வெற்றி அடைந்ததால், இதனை 28 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பிராணிகளை கவுரவமாக அடக்கம் செய்ய, மண்டல வாரியாக பிராணிகள் மயானம் வசதி செய்ய, கால்நடை பிரிவு இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேபிஸ் தடுப்பு மருந்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிராணிகள் நலனுக்கான சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் உத்தரவுகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில், யாருடனும் சமரசம் செய்து கொள்ள கூடாது.இவ்வாறு அவர்பேசினார்.