உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெயர், தொலைபேசி எண் பலகை நஜப்கர் சந்தை வியாபாரிகளுக்கு உத்தரவு

பெயர், தொலைபேசி எண் பலகை நஜப்கர் சந்தை வியாபாரிகளுக்கு உத்தரவு

நஜாப்கர்:தங்கள் பெயர்கள், தொலைபேசி எண்களை வண்டிகளில் மக்களுக்கு தெரியும்படி வைக்க டில்லியில் உள்ள நஜாப்கர் காய்கறி சந்தையில் வியாபாரிகளை வியாபாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.வங்கதேசம் மற்றும் மியான்பரில் இருந்து சட்டவிரோதமாக டில்லியில் குடியேறியவர்களால் ஏற்படும் பிரச்னையை தவிர்ப்பது குறித்து வியாபாரிகளுடன் இம்மாத துவக்கத்தில் நஜாப்கர் பா.ஜ., கவுன்சிலர் அமித் கர்காரி ஆலோசனை நடத்தினார்.இதைத் தொடர்ந்து, தங்கள் கடையில் வியாபாரியின் பெயர், மொபைல் எண் ஆகியவை அடங்கிய தகவல் பலகையை பொதுமக்கள் அறியும் வகையில் பகிரங்கப்படுத்தும்படி, நஜாப்கர் சந்தையில் வியாபாரம் செய்யும் அனைத்து வியாபாரிகளையும் வியாபாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.இதுகுறித்து நஜாப்கர் நசாப்கர் வணிகர் மண்டல் தலைவர் சந்தோஷ் ராஜ்புத் கூறியதாவது:நஜாப்கர் சந்தையில் வழக்கமாக வியாபாரம் செய்யும் அனைத்து வியாபாரிகளுக்கும் தனித்துவமான எண் வழங்கப்படும். அந்த எண்ணுடன் கூடிய பெயர் பலகையை அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளில் அடையாளப்படுத்த வேண்டும்.இந்த பகுதியில் உள்ள அனைத்து தெரு வியாபாரிகளும் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை சரிபார்ப்பதற்காக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.இந்த பதிவேடு, வியாபாரிகள் சங்கம் மூலம் பராமரிக்கப்பட்டு, பாதுகாப்பு நோக்கங்களுக்காக உள்ளூர் காவல்துறை மற்றும் டில்லி மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்படும்.இந்த சந்தைப் பகுதியில் பண்ணை விளைபொருட்களை விற்பனை செய்யும் 300க்கும் மேற்பட்ட தெரு வியாபாரிகள் இருக்கின்றனர். வரும் 20ம் தேதிக்குள் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.இந்த நடவடிக்கையின் மூலம், நாங்கள் காய்கறி சந்தையில் அமைப்பை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். தங்கள் விபரங்களை தெரிவிக்காத வியாபாரிகள் குறித்து பொதுமக்கள் எங்களிடம் தெரிவிக்கலாம்.இது சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய உதவும். பெயர்ப்பலகை இல்லாத எவரும், தங்கள் பொருட்களை சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.பங்களாதேஷ் மற்றும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், பொருட்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத விற்பனையாளர்கள் மீதான புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை யாரையும் அல்லது எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் பாகுபாடு காட்டுவதற்காக அல்ல, முழுக்க முழுக்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பாதுகாப்பிற்காக வியாபாரிகள் சங்கம் மற்றும் உள்ளூர் மக்களால் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது.அமித் கர்காரிபா.ஜ., கவுன்சிலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை