சமையல் எண்ணெய் விலை குறைக்க உத்தரவு
புதுடில்லி: கடந்த சில மாதங்களாக, சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருவது குறித்து, மத்திய உணவுத் துறை அதிகாரிகள் டில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் சூரியகாந்தி, பாமாயில், சோயாபீன் சமையல் எண்ணெய் ரகங்களின் இறக்குமதி வரியை 20ல் இருந்து 10 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. வரி குறைப்பின் பலனை நுகர்வோர் பெற, சமையல் எண்ணெய் ரகங்களின் விலையை குறைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுஉள்ளது.