உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நோட்டாவிற்கு அதிக ஓட்டு: விதிமுறைகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

நோட்டாவிற்கு அதிக ஓட்டு: விதிமுறைகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நோட்டா தொடர்பான விதிமுறைகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப் போட விரும்பாத வாக்காளர்கள் நோட்டாவுக்கு ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நோட்டாவிற்கு அதிக ஓட்டு கிடைத்தாலும் அது தேர்தல் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=40wlpwqc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஒரு தொகுதியில் வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக ஓட்டுகள் கிடைத்தால், எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என அறிவிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரசூட் கூறியதாவது: இந்த மனுவை விசாரிப்போம். நோட்டீஸ் அனுப்புவோம். இதுவும் தேர்தல் நடைமுறை தொடர்புடையது தான் எனக்கூறியதுடன் நோட்டா தொடர்பான விதிமுறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Jayaraman Sekar
ஏப் 27, 2024 11:12

ஓட்டுப் பதிவை அதிகரிக்க தேவையான எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் மட்டும் அல்லாமல் எப்போதும் இது குறித்து பேச வேண்டும் % ஓட்டுக்களுக்கு கீழாக பதிவானால் தேர்தல் ரத்து என்னும் சட்டம் விதி கொண்டுவரப்பட வேண்டும் அப்படி கொண்டுவந்தால் தான் இந்த அரசியல் கட்சிகள் பொய் கள்ள வாக்காளர்கள் அல்லது போலி வாக்காளர் பெயர்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வர் அனைவரும் வாக்களிக்கவும் கவனித்துக் கொள்ளுவர் ஓட்டளிக்கும் சமயங்களில் அவசியமின்றி வெளியூர் செல்வதையும் தடுக்க ஏற்பாடு செய்வர்


Balasubramanian
ஏப் 26, 2024 21:21

பெங்களூர் சென்னை முதலிய பெரு நகரங்களில் 48% முதல் 52% வரைதான் வாக்குகள் பதிவாகி உள்ளன! பதிவாகாத வாக்குகள் நோட்டா போலத்தானே ! ஆனால் அவைகளை யாரும் கருத்தில் கொள்வதில்லை! பதிவான வாக்குகளில் யார் அதிகமோ அவர் வெற்றி பெற்றதாக கருதப் படுகிறார்! பதிவான வாக்குகளில் நோட்டா அதிகம் இருந்தால் என்பது ஊடகத்தின் அடிப்படையில் எழுப்ப பட்டது! இதற்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க தேவை இல்லை!


Ramesh Sargam
ஏப் 26, 2024 20:52

நோட்டா ஓட்டுக்களை போட்டியிடும் மற்ற அனைவருக்கும் சமமாக பகிர்ந்துவிட்டால், ஓட்டுக்கள் வீண் ஆகாது எப்படி என் ஐடியா?


GMM
ஏப் 26, 2024 20:35

நோட்டோ - வேட்பாளர் பிடிக்கவில்லை அல்லது தேர்தல் பிடிக்கவில்லை என்று கூட எடுத்து கொள்ள முடியும் வாக்காளர் மனநிலை அறிய முடியாது பிரச்சாரம் மூலம் ஜனநாயக நம்பிக்கை குறைக்க முடியும் முன்பு கம்யூனிஸ்ட் பிரதான கட்சி? வாக்காளர் மக்கள் ஆதரவு இருந்தால் வேட்பாளர் ஆக முடியும் நம் நாட்டிற்கு நோட்டோ தேவையில்லை? புதிய சட்டம் இயற்ற நான்கில் மூன்று பங்கு வாக்கு சட்டம் திருத்த / மேன்படுத்த நான்கில் இரண்டு பங்கு வாக்கு இடை தேர்தல் கூடாது அடுத்த குறைந்த வாக்கு பெற்றவர் மக்கள் பிரதிநிதி உணவு, மருத்துவம் தவிர மற்ற இலவசம் நிறுத்தம்


ஆரூர் ரங்
ஏப் 26, 2024 20:13

மறு தேர்தலிலும் நோட்டாவே வென்றால் பிரதிநிதி இல்லாமலே தொகுதி இருக்குமா அல்லது நோட்டா தோற்கும் வரை மறு மறு மறு தேர்தல்கள் நடத்திக் கொண்டேயிருக்க முடியுமா ?


A1Suresh
ஏப் 26, 2024 19:42

பப்பு போன்ற கைப்புள்ளைகள் மட்டுமே நோட்டாவை தேர்ந்தெடுப்பர் - இன்னும் பத்து வருடங்களில் காங்கிரஸ் முக்தி பெறும் -எனவே பப்புவும் நோட்டாவையே தேர்ந்தெடுப்பார்


kskmet
ஏப் 26, 2024 19:28

எல்லோரும் கட்டாயமாக வோட்டளிக்க சட்டபூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அதை விடுத்து நோட்டா தோட்டா என்ற ஆடம்பர விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும்.


Anantharaman Srinivasan
ஏப் 26, 2024 23:12

எல்லோரும் ஓட்டளிக்க சட்டபூர்வமாக செய்வது அவ்வளவு எளிதல்ல அதற்கு நானே முதல் எதிரி


ஆரூர் ரங்
ஏப் 26, 2024 19:18

நோட் விநியோகம் இருக்கும்வரை நோட்டா ஜெயிக்க வாய்ப்பில்லை.


Anantharaman Srinivasan
ஏப் 26, 2024 18:36

வேட்பாளரை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் விழுந்தால் ஐந்துவருடகாலம் அந்த தொகுதி MLA MP இல்லாமலிருக்க முடியுமா? ஆறுமாதத்தில் மறுதேர்தல் நடத்துவார்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு நோட்டா நிரந்தர தீர்வல்ல


Srinivasan Krishnamoorthi
ஏப் 26, 2024 17:59

மிக சரி


மேலும் செய்திகள்









புதிய வீடியோ