உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடந்த தேர்தலை விட 5 மடங்கு அதிகம்; பீஹாரில் 100 இடங்களில் களம் இறங்க ஒவைசி கட்சி திட்டம்!

கடந்த தேர்தலை விட 5 மடங்கு அதிகம்; பீஹாரில் 100 இடங்களில் களம் இறங்க ஒவைசி கட்சி திட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட ஒவைசி கட்சி முடிவு செய்துள்ளது. இது கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகம்.243 உறுப்பினர்களைக் கொண்ட பீஹார் சட்டசபைக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறும். இதனால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுக்கள் நடந்து வருகின்றன.பீஹார் சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி முடிவு செய்துள்ளது. இது கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகம். இது தொடர்பாக, ஒவைசி கட்சியின் பீஹார் மாநில தலைவர் அக்தருல் இமான் கூறியதாவது: 100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது திட்டம். இரண்டு கூட்டணிகளும் தங்களது இருப்பை உணர வேண்டிய நிலையில் உள்ளன. 2020ம் ஆண்டு தேர்தலின்போது, நாங்கள் ஓட்டுகளை பிரித்ததாக மகா கூட்டணி குற்றம்சாட்டியது. அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க விருப்பம் இருப்பதாக நான் லாலு மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு கடிதம் எழுதியது அனைவரும் அறிந்ததே. ஆனால், அங்கிருந்து பதில் வரவில்லை.தற்போது நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. 3ஆவது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருகிறோம். இன்னும் சில நாட்களில் அது தெளிவாகிவிடும். பீஹாரில் மூன்றாவது மாற்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். பல ஆண்டுகளாக, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியை மையமாகக் கொண்டு அரசியல் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடனும் கூட்டணி அமைத்து ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இதில், 5 இடங்களில் ஒவைசி கட்சி வென்றது. அவர்களில் 4 பேர் லாலு கட்சியில் பின்னாளில் இணைந்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தாமரை மலர்கிறது
அக் 11, 2025 23:18

வெரி குட். இஸ்லாமிய மக்களுக்காக போராடுபவர் ஒவேஷி. தமிழகத்திலும் எல்லா இடங்களிலும் ஒவேஷி நிற்கவேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் திமுக மற்றும் காங்கிரஸ் ஒட்டுவேட்டையாடுகின்றன.


Field Marshal
அக் 11, 2025 22:13

ஆப்கனிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பீகாரில் பிரச்சாரம் செய்வாரா ?


Thravisham
அக் 12, 2025 04:24

துண்டு சீட்டே பீகாரில் பிரச்சாரம் செய்யும் போது இடிஅமீன் பிரச்சாரம் செய்வார்


பா மாதவன்
அக் 11, 2025 22:00

ஜனத் தொகை நிச்சயம் கூடி இருக்கும் என்ற நம்பிக்கை தான். வேறு என்ன. விட்டால் இன்னும் 20 வருஷங்களில் நம் நாட்டை பாகிஸ்தான் ஆக மாற்ற முயற்சிக்கக் கூடும். நம்மவரகளில் சிலர் காசு கொடுத்தால் அப்பா அம்மா அவர்களையே மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள் இருக்கும் வரை மதம் மாற்றம் இருக்கும். நாம் தான் மனம் மாற வேண்டும். மதம் மாற்றம் அல்ல. நம் முன்னோர்களில் சிலர் நாய்க்கு ரொட்டி துண்டு போடுவது போல் பிரிட்டிஷ் காரன் போட்ட வலையிலும், துப்பாக்கி கத்தி காண்பித்து மிரட்டிய இஸ்லாமியர்கள் வலையிலும் பயந்து போய், மயங்கி போய் வீழ்ந்து விட்டனர். இன்று அவர்கள் வம்சத்தில் வந்த நம் சகோதரர்கள் சகோதரிகளுக்கு உண்மை தெரிந்து, புரிந்துணர்வு இருந்தால், நாமாவது பாரதத் தாயின் புதல்வர்கள்..நாம் பிரிட்டிஷ் நாட்டிலிருந்தோ, அரேபியாவில் இருந்தோ வரவில்லை என்ற உணர்வு இருந்தால் நம் சனாதன தர்மத்தை பேணி காத்து வந்தால், இந்த ஒவைசி வேலை எடுபடுமா... எடுபடாது என்றும் பாரதத்தை நம் பாரதத்தாய் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் விரும்பும் வேண்டும் அன்பர்களில் அடியேனும் ஒருவன்.


மனிதன்
அக் 11, 2025 21:56

பலர் சொல்லும்போது நம்பவில்லை, ஆனால் உண்மையாகவே இந்தாளு பாஜகவின் B டீமுதான் போல...


SANKAR
அக் 11, 2025 20:36

INDI koottani idiotic koottani.Oiwasi just wanted 20.He was insulted by not even sending a reply...NOW THIS


Thravisham
அக் 11, 2025 20:58

ஒவாய்சி பாஜக பி டீம்


A viswanathan
அக் 11, 2025 23:01

மக்களே விழித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்வை நாசமாக்கி கொள்ளாதீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை