உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது

தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது

புதுடில்லி: 'தினமலர்' நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, 'பத்ம ஸ்ரீ' விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0aoa0m8s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பத்திரிகை தொடர்பான பல்வேறு தேசிய அமைப்புகளில், உயர் பதவி வகித்துள்ள லட்சுமிபதி, மதுரையில் கல்வி நிலையங்களை துவங்கி, கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்வி கற்க உதவினார்.

மூன்றாவது மகன்

மருத்துவம் தொடர்பான, 'தி ஆன்டிசெப்டிக்' மற்றும், 'ஹெல்த்' கடல் சார்ந்த 'சாகர் சந்தேஷ்' (இ - பேப்பர்) ஆகிய பத்திரிகைகளையும் நடத்தி வரும் லட்சுமிபதி, பத்திரிகை துறையிலும், கல்வி துறையிலும் ஆற்றிவரும் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தினமலர்' நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் மூன்றாவது மகன் ஆர்.லட்சுமிபதி; 1935ல் பிறந்தார். திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (வேதியியல்) பட்டம் பெற்ற பின், பிரிட்டனில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் செய்தித்தாள் மேலாண்மை பயின்றார்.கடந்த 1956ல் 'தினமலர்' நாளிதழில் பொறுப்பு ஏற்றார். துவக்கத்தில் விளம்பரப் பிரிவில் பணியாற்றினார். இதழியல் அனுபவம், மேலாண்மை திறனால், அதிக விற்பனையாகும் நாளிதழாக 'தினமலர்' நாளிதழை உயர்த்தினார்.

தலைவர் பொறுப்பு

பி.டி.ஐ., செய்தி நிறுவனம், இந்திய நாளிதழ் சங்கமான ஐ.என்.எஸ்., இந்திய மொழி நாளிதழ் கூட்டமைப்பான, ஐ.எல்.என்.ஏ., மற்றும் நாளிதழ் விற்பனை தணிக்கை அமைப்பான, ஏ.பி.சி., ஆகியவற்றின் தலைவர் பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினராகவும் இருந்தார்.சுப்புலட்சுமி லட்சுமிபதி அறக்கட்டளையை நிறுவி, எஸ்.எல்.சி.எஸ்., அறிவியல் கல்லுாரி, கே.ஆர்.எஸ்., பள்ளி, ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் கல்லுாரி போன்றவற்றை துவக்கினார்.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும், கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் லட்சுமிபதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. மதுரை காமராஜ் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் கவர்னரின் பிரதிநிதியாக பணியாற்றினார்.

விருதின் விபரம்

இந்தியாவின் நான்காவது உயரிய விருது பத்ம ஸ்ரீ; 1954ல் துவங்கப்பட்டது. கல்வி, வணிகம், கலை, மருத்துவம், விளையாட்டு, சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரைகளை பத்ம விருது கமிட்டி பரிசீலித்து, பிரதமர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் அறிவிக்கப்பட்டு ஏப்ரலில் வழங்கப்படும்.ஜனாதிபதி, பிரதமருக்கு நன்றிநாட்டிற்கும், சமூகத்திற்கும் சேவையாற்றி வருவதற்காக, டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, 'பத்ம ஸ்ரீ' விருது அறிவித்து கவுரவித்ததற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும், பிரதமர் மோடிக்கும், 'தினமலர்' குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

RAMAKRISHNAN NATESAN
ஜன 27, 2025 17:13

கவுரவம் ........ பாராட்டுக்கள் ......


M. PALANIAPPAN
ஜன 27, 2025 12:54

வாழ்த்துக்கள்


Venkataraman
ஜன 27, 2025 10:07

வாழ்த்துக்கள். இதைவிட பெரிய பாரத் ரத்னா விருது பெறுவதற்கும் தகுதி உடையவர் லட்சுமிபதி அவர்கள். தமிழகத்தில் பெரும்பாலான பத்திரிகைகள் திமுகவினரின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது தினமலர் மட்டுமே நடுநிலையாக செய்திகளை தருகிறது.


raj
ஜன 27, 2025 15:39

Laughed out loud


RAMAKRISHNAN NATESAN
ஜன 27, 2025 17:13

வெங்கடராமன் ... நீங்கள் சொல்வது சரியே ..... தங்களது கட்சி மீடியா போல தினமலர் நடந்துகொள்ளவில்லை என்று கோபப்படுபவர்கள் அதிகம் .....


Sankar Madurai
ஜன 27, 2025 09:16

வாழ்த்துக்கள் சார். தாங்கள் ஆற்றிவரும் சேவைகளான பத்திரிக்கை மற்றும் கல்விக்கு கிடைத்த அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருது.மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.


தமிழ் நிலன்
ஜன 26, 2025 23:39

பத்திரிகை துறையில் தூய்மையானவர். நேர்மையான மனிதர். உண்மையின் உறைவிடம். பண்பாளர். இவருக்கு இணையான இன்று யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம்


Gopi Panneerselvam
ஜன 26, 2025 23:03

வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன். உங்களது கல்வி பணி, சமூக பணி மென்மேலும் தொடர கடவுளை வேண்டிக் கொள்கிறேன். நன்றி


CHIVAS
ஜன 26, 2025 21:30

வாழ்த்துக்கள்.....


குமரன்
ஜன 26, 2025 21:15

ஊடக நேர்மை, சிறந்த சமூக சேவை. தினமலரின் பங்களிப்பு பாராட்டுக்கு உரியது .வாழ்த்துக்கள்


ram prasath
ஜன 26, 2025 20:31

தினமலர் படித்தால் முழு நிறைவு .NAL VALTHUKKAL


Vadakkuppattu Ramanathan
ஜன 26, 2025 19:55

வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை