உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி

பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காம் தாக்குதல் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய புள்ளி பெரும் பங்கு வைத்திருப்பது என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் மற்றும் அவர்களுக்கு உதவியதாக கூறப்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பாண்டிபோரா, சோபியான், புல்வாமா பகுதிகளில் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கினர். இந் நிலையில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தொடர்பு தாக்குதலில் இருப்பதை உறுதி செய்துள்ள என்.ஐ.ஏ., அதிகாரிகள் அடுத்தக்கட்ட விசாரணையை நோக்கி நகர்ந்துள்ளனர். அவர்களின் விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன்படி, பஹல்காம் தாக்குதலில் முக்கிய பங்கு வைத்திருப்பது லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய புள்ளியான பரூக் அகமது என்பது தெரிய வந்திருக்கிறது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவன் பதுங்கி உள்ளான். ஸ்லீப்பர் செல் நெட்வொர்க் மூலமாக கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி உள்ளான். அதில் பஹல்காம் தாக்குதல் சம்பவமும் அடக்கம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல கடினமான பாதைகளை நன்கு அறிந்து வைத்துள்ளவன். பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதில் முக்கிய பங்கு இவனுக்கு உள்ளது. மேலும் பல்வேறு நவீன தகவல் தொழில்நுட்ப செயலிகள் மூலம் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்தே தொடர்பு கொண்டு சதி திட்டங்களை அரங்கேற்றியவன். இவ்வாறு என்.ஐ.ஏ., நடத்திய பலகட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Venkatesan Srinivasan
ஏப் 30, 2025 17:26

இந்த அணுகுமுறை எங்கோ இடிக்கிறதே? ஹபீஸ் சையது என்பவன் கூட இந்தியாவிற்கு எதிராக பல பயங்கரவாத செயல்களை செய்து விட்டு இப்போது பாகிஸ்தானில் உபன்யாசங்கள் செய்து கொண்டு இருக்கிறான். ஆக ஆக பாகிஸ்தான் ஒட்டுமொத்த பயங்கரவாதிகள் மற்றும் கொலையாளிகளின் புகலிடம் என்பது தெளிவு ஆகின்றது. இவர்களுக்கு இஸ்ரேல் மாடல் சிகிச்சை மட்டுமே தகும். அவர்கள் இழப்பு ஒன்றுக்கு, நூறு இருநூறு என திருப்பி தருவார்கள். சிவிலியன் இழப்பு 1200க்கு இதுவரை எதிரிகள் தரப்புக்கு 45000 வரை திருப்பி கொடுத்து விட்டனர். இஸ்ரேல் "ப்ராக்ஸி வார்" செய்யாது. பாகிஸ்தானுடன் பின்நாட்களில் நடந்த சண்டைகளின் போது நமது கை ஓங்கி இருந்தபோது பிஓகே விஷயத்தை இந்தியா முடிக்காது விட்டது தவறான அணுகுமுறை. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே வாழ்க வளர்க பாரதம் இந்திய தேசிய தமிழ் தமிழகம்.


நிக்கோல்தாம்சன்
ஏப் 30, 2025 16:14

இவ்வளவு மூளையும் நல்வழியில் பயன்படுத்தியிருந்தா ன்று பாகிஸ்தானும் ஏழ்மை நிலையில் இருந்து வெளியே வந்திருக்கலாம் , இலவசம் என்ற ஒன்றை காட்டி உங்களையெல்லாம் அடிமைப்படுத்திய மேற்குலக நாடுகளை இன்னமும் நம்பிக்கொண்டு வாழ்க்கையை தொலைத்து


தத்வமசி
ஏப் 30, 2025 13:34

வீடுகளை ஏன் இடித்தீர்கள் என்று பஞ்சாயத்து கேட்டால் என்ன சொல்லப் போகிறார்கள் ? அவர்களிடமே துப்பாக்கியை கொடுத்து எல்லையில் நிற்க வைத்து விடலாம். வாய் மொழியில் பேசினால் இவர்கள் அடங்க மாட்டார்கள்.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 30, 2025 12:44

NIA: National Investigation Agency Government of India. இந்த அமைப்பு குற்றங்கள் நடந்தால் அது யாரால் எப்படி திட்டமிடப்பட்டு எப்படி யார் மூலமாக நிறைவேற்றினார்கள் அவர்களின் பூர்வீகம் மற்றும் வீடு வாசல் எங்குள்ளது மற்றும் வெளி நாட்டுத் தொடர்புகள் என்னென்ன யார் எங்கிருந்து பணம் கொடுத்து உதவினார்கள் என்றெல்லாம் தோண்டித் துருவி விசாரித்து பத்தே நாளில் புட்டு புட்டு வைத்து விடுவார்கள்.


சமீபத்திய செய்தி