உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் பூங்கா மீண்டும் திறப்பு

பஹல்காம் பூங்கா மீண்டும் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் மூடப்பட்ட சில பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டன.ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் ஏப்.,22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பஹல்காம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் பூங்காக்கள் மூடப்பட்டன. இதையடுத்து தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியதால் காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கடந்த 14ல் ஜம்மு -மற்றும் காஷ்மீர் பகுதிகளில் தலா எட்டு பூங்காக்களை திறக்க உத்தரவிட்டிருந்தார். மற்ற பூங்காக்கள் படிப்படியாக திறக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.இதன்படி முதற்கட்டமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஹல்காமின் பெட்டாப்பள்ளத்தாக்கு பூங்கா மற்றும் பஹல்காம் சந்தை அருகேயுள்ள பூங்கா, வெரினாக், கோகர்னாக் மற்றும் அச்சாபால் தோட்டம், பதாம்வாரி பூங்கா, நைஜின் அருகேயுள்ள வாத்து பூங்கா, ஹஜ்ரத்பாலில் உள்ள தக்தீர் பூங்கா ஆகியவை நேற்று திறக்கப்பட்டன.இதேபோல் ஜம்மு மண்டலத்தில் கதுவா பகுதியில் உள்ள சர்தால் மற்றும் தக்கார், ரியாசியில் உள்ள தேவிபின்டி, சியாத் பாபா, சுலா பூங்கா, தோடா பகுதியில் உள்ள குல்தான்டா, ஜெய் பள்ளத்தாக்கு பூங்கா, உதம்பூரின் பஞ்சேரி பூங்காவும் நேற்று திறக்கப்பட்டன. பூங்காக்களை சுற்றி ஏராளமான பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

spr
ஜூன் 18, 2025 17:42

வருமானம் கருதி தொடங்கப்பட்டாலும், பாராட்டலாம் ஆனால், பொதுவாகவே இது போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாற்காலிகமான ஒன்றானாலும் கூட முதலுதவி மருத்துவ வசதி, குடி நீர் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட வேண்டும். ஆம்புலன்ஸ் மற்றும் காவற்துறை வாகனங்கள் செல்ல ஏற்ற சாலைகள் அவசியம் CC TV அமைப்புக்கள், கைபேசி வசதி முறையான வழிகாட்டிகளும் அவசியம் காஷ்மீர் போன்ற இடங்களில் இவை மிக மிக அவசியம். பொதுவாகத் தானாக வழக்குகளை முன்னெடுக்கும் நீதிமன்றங்கள் இவை குறித்து கேள்வி எழுப்பாததும் பரிந்துரைகள் எதுவும் சொல்லாதிருப்பது வியப்பாக இருக்கிறது


J.Isaac
ஜூன் 18, 2025 11:34

இப்போது ஊடகங்களுக்கு முக்கிய செய்தி அகமதாபாத் விமானவிபத்து.


Kasimani Baskaran
ஜூன் 18, 2025 03:43

சுற்றுலா துறைக்கும் அந்தப்பகுதியில் லோக்கல் பொருளாதாரத்துக்கும் நல்லது. அதே சமயம் பாதுகாப்பில் கவனமாக இருக்கவேண்டும்.


சமீபத்திய செய்தி