உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; ஜிப் லைன் ஆப்ரேட்டர் முசாமில் அகமதுவிடம் என்.ஐ.ஏ., விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; ஜிப் லைன் ஆப்ரேட்டர் முசாமில் அகமதுவிடம் என்.ஐ.ஏ., விசாரணை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, ஜிப்லைன் ஆபரேட்டர் முசாமில் அகமது கும்ஹர் இடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.காஷ்மீர் மாநிலம், பஹல்காமில், பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள, 'ஜிப் லைன்' எனப்படும், கம்பியில் தொங்கிச் செல்லும் விளையாட்டை நடத்தி வரும் முசாமில், மூன்று முறை மத கோஷம் எழுப்பிய பிறகே துப்பாக்கிச் சூடு நடந்ததாக சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்தார். அதை அவர் படமாக்கி உள்ளார். ஆனால், 'ஆபத்தான நேரத்தில் இதுபோல் மத கோஷம் எழுப்புவது வழக்கமானது தான்' என, முசாமில் தந்தை கூறியுள்ளார். இது தொடர்பாக ஜிப் லைன் ஆப்பரேட்டர் முசாமில் அகமது கும்ஹர் இடம் என்.ஐ.ஏ,. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் விசாரணையின் போது, பயங்கரவாத தொடர்புகளை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், தாக்குதல் நடந்த தினத்தில், அங்கிருந்த சிற்றுண்டி கடைகளுக்கு பின் பகுதியில், பயங்கரவாதிகள் முன்கூட்டியே வந்து அமர்ந்திருந்ததாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு ஜிப்லைன் ஆபரேட்டர் முசாமில் தந்தை அப்துல் அஜீஸ் கூறியதாவது: 'அல்லாஹு அக்பர்' என்பது பயங்கரவாதிகளுக்கான முழக்கம் இல்லை. நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை. ஆனால், நாங்கள் புயல் வந்தாலும் கூட 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவோம். சுற்றுலாப் பயணிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவன் 'அல்லாஹு அக்பர்' எனக் கூறியிருப்பான். அவன் நிஜமாகவே வேலை செய்து நேர்மையாகப் பணம் சம்பாதிக்கவே அங்கு வேலை பார்த்தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

DEEPAK
மே 04, 2025 06:33

தாமதிப்பது தோல்வி.இன்னேரம் போரை ஆரம்பித்து இருக்கவேண்டும்.


Anbalagan
மே 01, 2025 17:49

நம்மைப் பிளவு படுத்தி வெல்ல வேண்டும் என்று அந்நிய பயங்கரவாதிக் கொடுநாய்கள் நினைத்துச் செயல்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்குள்ள அரசியல் கொடுமதியாளர்கள் சந்தடிசாக்கில் இடுக்கிலே கடுக்கனைக் கழட்டுவது போல மதச்சாயம் பூசி அரசியல் செய்வது தான் புரிய வில்லை. குதிரைக்காரன் துப்பாக்கியைப் பிடுங்கப்போய் உயிரிழந்தானே,அதே மனநிலை தானே அங்கு பணியாற்றிய ஒவ்வொரு காஷ்மீரிக்கும் இருந்திருக்கும். இந்தக் கொடுஞ்செயலில் தப்பி வந்த எவரும் அங்கிருந்த உள்ளூர்வாசிகளைக் குற்றம் சாட்ட வில்லை. தீவரவாதத்தை வேரறுப்போம். மாறாக உள்ளூர் தீவிரவாதத்துக்கு எண்ணெய் ஊற்ற வேண்டாம்.


நிக்கோல்தாம்சன்
ஏப் 30, 2025 16:11

நம்பிட்டோம் முதுகில் குத்தும் போதும் கூட என்னவென்று சொல்வார்கள் அய்யா


RRR
ஏப் 30, 2025 13:28

இப்படித்தான் இவ்வளவு காலமா இந்தியாவை ஏமாத்தி சூறையாடிக்கிட்டு இருக்கானுங்க மூர்க்கனுங்க... இவர்களில் ஒருத்தனைக்கூட நம்புவதற்கில்லை.... புரிந்துகொள்ளுங்கள் அனைவரும்...


GMM
ஏப் 30, 2025 13:28

மூன்று முறை மத கோசம். பின் துப்பாக்கி சூடு . பயணி பாதுகாப்பு என்றால் ஒவ்வொரு நாளும் கோசம் இட வேண்டும். ஆபத்தை உணர்ந்த அங்கு இருந்த இஸ்லாமியர் கோசம் போட்டு இருக்க வேண்டும். தாய், தந்தைக்கு மகன் செயல் அறியது கடினம். உள்ளூர் உதவியின்றி பகலில் தாக்கி, தப்பிக்க முடியாது. ராணுவ நடமாட்டம் மிகுந்த பகுதிகள். உதவியவர்கள் யார்? கோவை குண்டு வெடிப்பில் இஸ்லாமியர் சிக்கவில்லை? ராஜிவ் கொலையில் காங்கிரஸ் , திமுக, பிரமுகர் சிக்கவில்லை. பகல்காம் ஒரு இஸ்லாமியர் சிக்கவில்லை. நாடு முழுவதும் போலீசை ஏமாற்றி வருகின்றனர். ?


Sivagiri
ஏப் 30, 2025 13:05

அக்னிவீர் படையினருக்கு ஸ்லீப்பர் செல் பயிற்சி அளித்து , பாகிஸ்தானியர் போல , களம் சால சிறந்தது . . .


JAINUTHEEN M.
ஏப் 30, 2025 12:36

அந்த ஜிப் லைன் ஆபரேட்டர் தனது வாடிக்கையாளர் ஆபத்தின்றி நல்லவிதமாக திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டி அவரை ஜிப்லைனில் அனுப்புகிறார். இதை அறியாமல், அவரை தீவிரவாதிகளுடன் தொடர்பு படுத்துவது கண்டிக்கத்தக்கது.


K V Ramadoss
ஏப் 30, 2025 13:54

எல்லாமே யூகம்தான்


Tetra
ஏப் 30, 2025 14:09

நம்ப வேண்டியதுதான். நீங்க சொல்டீங்கல


வாய்மையே வெல்லும்
ஏப் 30, 2025 15:08

ஜைனுத்தீன் உனக்கு உங்க திரவீடியோ அல்லக்கைகளை திருப்தி படுத்தவே நேரம் இருக்காது இதுல உனக்கு சம்பந்தமே இல்லாத காஷ்மீர விஷயத்தில் உன்னோடைய துருப்பிடித்த துப்பறியும் ஞானத்தை எவனும் கேட்கவில்லை. முந்திரிக்கொட்டை மாதிரி உளரவேணாம் .


Ramesh Sargam
ஏப் 30, 2025 12:14

இந்த பயங்கரவாதி பிரச்சினைக்கு ஒரே முடிவு - அவர்களை ஆதரித்து, அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை கண்டறிந்து முதலில் அவர்களை ஒழித்துவிட்டால், இந்த பயங்கரவாதி பிரச்சினை முடிவுக்கு வரும்.


saravan
ஏப் 30, 2025 12:06

அதேபோல் எதிர் கருத்து கூறிய நடிகன் சித்தார்த், சீமான் என்கிற சைமனிடமும் விசாரிக்க வேண்டும்.


NACHI
ஏப் 30, 2025 11:48

ஒரு வேலை ஜீப்பர் லைனில் போகும் ஒவ்வோரு நபர்களுக்கும் பாதுகாப்பாக போக சொல்லிருக்கலாம்...


Tetra
ஏப் 30, 2025 14:11

எதற்கு சப்பைக்கட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை