புதுடில்லி: இந்தியா மீது தாக்குதல் நடத்த இரவு முழுவதும் பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள், ஏவுகணைகளை நம் பாதுகாப்பு படையினர் துல்லியமாக கண்டறிந்து சுட்டு வீழ்த்தினர்.எல்லை பகுதியில், பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோட்டா, ஜம்மு, பெரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், பூஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா உள்ளிட்ட 26 இடங்களில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=134biuci&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தானின் அனைத்து ஏவுகணைகள், டிரோன்களை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளனர். இரவு முழுவதும் நம் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய ஏவுகணைகள், டிரோன்கள் விபரம் பின்வருமாறு: * பாக்.,கின் புரொஜக்டைல் ஏவுகணை ஜலந்தரில் சுட்டு வீழ்த்தப்பட்டது.* பாக்., பத்தா ஏவுகணையை இந்திய பாதுகாப்பு படையினர் துல்லியமாக குறி வைத்து சுட்டு வீழ்த்தினர்.* ஸ்ரீநகர் மற்றும் அவந்திபுரா பகுதியில் இரண்டு பாகிஸ்தானிய ஜெட் விமானங்களை நமது ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.* பஞ்சாப், அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவிய காமிகேஸ் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தபட்டது.* அமிர்தசரஸின் காசா கான்ட் பகுதியில் பாக்., டிரோன்கள் அழிக்கப்பட்டது.* பாக்., சியால்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் தகர்க்கப்பட்டது. ராவல்பிண்டியில் பாக்., விமானபாதுகாப்பு கூண்டு தகர்க்கப்பட்டது.* இந்திய வான்பரப்பை ஆகாஷ், பராக் 8, எம்.ஆர்., - எஸ்.ஏ.எம்., ஸ்பைடர் ஆகியற்றை பயன்படுத்தி பாகிஸ்தானின் டிரோன்கள், ஏவுகணைகளை இந்தியா சுட்டு வீழ்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.குஜராத்தில் பாகிஸ்தானின் டிரோனை இந்திய பாதுகாப்பு படையினர் இடைமறித்து தாக்கி அழித்தனர்.உதிரி பாகம் கண்டெடுப்பு!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள பொக்ரானில் பாகிஸ்தான் பயன்படுத்திய ஏவுகணையின் உதிரி பாகம் கிடைத்துள்ளது. இப்பகுதியில் பாகிஸ்தானின் தாக்குதலை இந்திய ராணுவம் வானிலேயே முறியடித்தது. பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானின் ஏவுகணையை துல்லியமாக கண்டறிந்து சுட்டு வீழ்த்தியுள்ளனர்.அதேபோல, பாகிஸ்தானின் டிரோன் ஏவுதளத்தை இந்தியா ராணுவம் தாக்கி அழித்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.கோவில் அருகே தாக்குதல்
ஜம்முவில் ஷம்பூ கோவில் அருகே பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. பாதுகாப்பு படையினர் டிரோன்களை சுட்டு வீழ்த்தி தாக்குதல் முயற்சியை முறியடித்தனர். டிரோன்களின் சேதமடைந்த பகுதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றினர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.