உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகள் பட்டியலில் நடிகர் சல்மான் கான் பெயரை சேர்த்து பாக்., அரசு அடாவடி

பயங்கரவாதிகள் பட்டியலில் நடிகர் சல்மான் கான் பெயரை சேர்த்து பாக்., அரசு அடாவடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத் : பலுசிஸ்தானை தனி நாடு போல் குறிப்பிட்டு சவுதி அரேபியாவில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பேசியதால், அவரது பெயரை பயங்கரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சமீபத்தில் நடந்த 'ஜாய் போரம் - 2025' என்ற நிகழ்ச்சியில், சக பாலிவுட் நடிகர்களான ஷாருக் கான் மற்றும் அமீர் கானுடன், சல்மான் கான் பங்கேற்றார். அப்போது மேற்காசியாவில் இந்திய சினிமாவின் செல்வாக்கு குறித்து பேசும்போது, அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் சர்ச்சையை எழுப்பியுள்ளன.“நீங்கள் ஒரு ஹிந்தி திரைப்படம் எடுத்து சவுதி அரேபியாவில் வெளியிட்டால், அது சூப்பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால், அது பல நுாறு கோடிகளை சம்பாதிக்கும். ஏனென்றால், பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். இங்கு, பலுசிஸ்தானைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்; ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்; பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள் உள்ளனர், அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள்,'' என சல்மான் கான் பேசியிருந்தார்.பாகிஸ்தான், பலுசிஸ்தானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது. இந்நிலையில், சல்மான் கான் அதை ஒரு தனி நாடு போல் குறிப்பிட்டது பிரிவினைவாதத்தை ஆதரிப்பது போல உள்ளது என பலரும் விமர்சித்துள்ளனர். இதையடுத்து, பாகிஸ்தான் அரசு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் உள்ள நான்காவது அட்டவணையில், சல்மான் கானின் பெயரை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.இந்த அட்டவணை, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதில் சேர்க்கப்பட்டால், கடும் கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட நடவடிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும். எனினும், இந்த அறிவிப்பின் நம்பகத்தன்மை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

karthik
அக் 27, 2025 09:58

சல்மான் கானையே தீவிரவாதியாக அவர்கள் கருதும் போது...


duruvasar
அக் 27, 2025 09:37

மீதி இரண்டு கான்களும் பாக்கிஸ்தான் தேசபக்திகளுடன்தான் இருகிறார்கள்.


வாய்மையே வெல்லும்
அக் 27, 2025 07:22

முதலில் தேசம் பிறகு தான் இனம்


Vasan
அக் 26, 2025 22:53

சல் "மான்" கான்.


NRajasekar
அக் 26, 2025 22:45

இதில் எங்க வந்தது அநியாயம் இந்தியாவில் வாழ்ந்து இந்திய மக்களின் பணத்தில் ஆடம்பர வாழ்கை. ஆணால் நேசிப்பது. பாக்கியை. மற்றும் இந்துக்களை. விமர்சித்து. இந்திய தேசியவாதிகளை மட்டமாக சித்தரித்து தன் படம் ஓடாவிட்டால் வெளிநாட்டுக்கு ஓடுவேன் என்று சொல்லமட்டும் போகவில்லை இன்னும்


சூர்யா
அக் 26, 2025 22:45

நமது நாட்டில் இது மாதிரியான பேச்சை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாதிகள் பட்டியல் தயார் செய்தால் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் இல்லை. ஏன் சில நேரம் கோடிகளை கூட தொடலாம். அவ்வளவு பேரை லிஸ்டில் சேர்க்கும் சூழல் உருவாகும்.


V K
அக் 26, 2025 22:36

பாகிஸ்தானில் அரசு என்று ஒன்று இருக்கா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை