உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் 65 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வசிக்கும் பாகிஸ்தானியர்

பீஹாரில் 65 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வசிக்கும் பாகிஸ்தானியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரின் பஹல்பூர் மாவட்டத்தில் கடந்த 65 ஆண்டுகளாக வசித்து வந்த இரு பாகிஸ்தானியர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர பணி மூலம் இது தெரிய வந்துள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qxsz2yjy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர பணியை மேற்கொண்டது. அதில், 65 லட்சம் பேர் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர பணியின் போது பஹல்பூரில் வசித்து வந்த இம்ரானா கானம் மற்றும் பிர்தோஷியா கானம் இருவரும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு தேர்தல் அதிகாரிகள் கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில், அவர்களது ஆவணங்களை சரிபார்த்தபோது, இருவரும் 1956ல் இந்தியாவுக்கு வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும், விசா காலம் முடிவடைந்தும் இந்தியாவை விட்டு வெளியேறாமல் பஹல்பூரிலேயே தங்கியிருந்து, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ரத்து செய்யப்பட்டன. பூத் முகவர்கள் வாயிலாகவும் இரு பாகிஸ்தானியரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாக கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான நவால் கிஷோர் சிங் கூறினார். ஆதார் அடையாள அட்டையை நம்பகமான ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது என தேர்தல் கமிஷன் கூறி வந்தது. இந்தச் சூழலில், இரு பாகிஸ்தானியர், மோசடி ஆவணங்களை வைத்து ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வரை பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீஹாரில் 1.8 சதவீதம் மட்டுமே நீக்கம்

புதுடில்லி, ஆக. 25-'பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் 1.8 சதவீதம் பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர்' என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக இதுவரை 98.2 சதவீத வாக்காளர்களிடம் இருந்து ஆவணங்கள் பெறப் பட்டுள்ளன. இதையடுத்து, 1.8 சதவீதம் பேர் மட்டுமே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில், 0.16 சதவீதம் பேரிடம் இருந்து மட்டுமே ஆட்சேபம் வந்துள்ளது. திருத்தம் செய்வதற்கா ன காலக்கெடு செப்., 1ம் தேதியுடன் முடிகிறது. எனவே, எஞ்சிய 1.8 சதவீத வாக்காளர்கள் தங்களது ஆவணங்களை சமர்ப்பித்தா ல், ஆய்வு செய்யப்பட்டு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
ஆக 25, 2025 08:18

பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த... இது போன்ற ஆட்களை தான் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது நீக்க கூடாது என்று.... இண்டி கூட்டணி ஆட்கள்.... கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறார்கள்.


சந்திரன்
ஆக 25, 2025 07:32

கொஞ்சம் தமிழ்நாடு வாங்க


K Jayaraman
ஆக 25, 2025 07:22

தேர்தல் சமயத்தில் Booth slip பை ஸ்மார்ட்போன் இருப்பவர்களுக்கு போனில் அனுப்பலாம்.


Padmasridharan
ஆக 25, 2025 05:07

நீக்கப்பட்டது சரியே என்று எடுத்துக்கொண்டாலும் எப்படி முந்தைய வருடங்களில் இவர்களை சேர்த்து வைத்திருந்தனர், பணம் வாங்கி ஆவணங்களை கொடுக்கும் போலி இந்திய ஆசாமிகளைதான் கைது செய்ய வேண்டும் சாமி.


xyzabc
ஆக 25, 2025 04:32

இந்த செயிதியை சுடலைக்கு தெரிவிக்கவும்.


Kasimani Baskaran
ஆக 25, 2025 04:10

காங்கிரஸ் பெரியதாக ஒரு பொய் சொல்லி இருக்கிறது. அதை திருத்திக்கொள்ள தேசிய அளவில் விளம்பரம் கொடுக்க வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2025 03:33

தமிழ்நாட்டில்/கருநாடகத்தில் மாத்திரம் வந்துறாதீங்க வாக்காள அடையாள அட்டையை சரிபார்க்கிறேன் என்று , தலை சுத்தி விழுந்துடுவீங்க , இந்தி பேசும் மாநிலத்திலேயே உங்களுக்கு கஷ்டம் ஆகா இருந்தா , தமிழ் நாட்டில் இப்படி இந்தி பேசிகிட்டு அஸ்ஸாமியர்கள் என்ற போர்வையில் உள்நுழைக்கப்பட்ட கள்ளக்குடியேறிகள் நாளை மண்ணின் மக்களை வந்தேறிகள் என்று அழைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை


Iyer
ஆக 25, 2025 00:26

மேற்கு வங்கத்திலும் SIR செய்யும்போது ராணுவம் கொண்டுவரப்படவேண்டும்


Iyer
ஆக 25, 2025 00:25

நீக்கப்பட்ட 65 லக்ஷம் பேர்கள் யார் ? அவர்கள் நிச்சயமாக பாரத நாட்டு பிரஜைகளாக இருக்க முடியாது. அவர்கள் பங்களாதேஷி, ரோஹிங்கியா அல்லது பாகிஸ்தானிகளாகவோ அல்லது மரணம் அடைந்தவர்கள் இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளை உடனே நாடு கடத்தவேண்டும்


சமீபத்திய செய்தி