உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதி திரட்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்

நிதி திரட்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது அழிக்கப்பட்ட பாக்., பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைக்க, 300 மசூதிகள் பெயரில், பகிரங்கமாக நிதி திரட்டும் நடவடிக்கையில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டு உள்ளது. நன்கொடைகள் மூலம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட, ஜெய்ஷ் - இ - முகமது முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, சமூக வலைதளங்கள் வாயிலாக தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியை தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க ஜி -7 நாடுகளால் எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்தது. இதனால், ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புகளுக்கு சென்று கொண்டிருந்த நன்கொடைகள் முடங்கின. தற்போது, எப்.ஏ.டி.எப்., கண்ணில் மண்ணை துாவி, 'ஈஸி பைசா', 'சதாபே' போன்ற டிஜிட்டல் செயலிகள் மூலம் நன்கொடை வசூலிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Arul Narayanan
ஆக 22, 2025 10:42

நிதிக்கென்ன குறைச்சல்? உலக வங்கி கடனும் அமெரிக்க உதவியும் வந்து விட்டதே.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஆக 22, 2025 06:24

மொத்த பாகிஸ்தான் கதை முடித்து விடுவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை