மேலும் செய்திகள்
ஆண்டிபாளையம் படகு குழாம்
30-Aug-2025
மூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்கு மாவட்ட சுற்றுலா துறை, மின்வாரியத்தின் 'ஹைடல் டூரிசம்' சார்பில் அதிவேக படகுகள் உட்பட பல்வேறு வகை சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. தனியாரின் பங்களிப்புடன் பொழுது போக்கு அம்சங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தற்போது தனியார் பங்க ளிப்புடன் 'பாரா சைலிங்' எனும் சாகச பயணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படகுடன் இணைக்கப்பட்ட பாரா சூட்டில் வானில் மிதந்தவாறு ஒருவர் செல்லலாம். ஒரு சுற்றுக்கு ரூ. 1,800 கட்டணம் வசூலிக்கின்றனர். சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவதால், அதில் செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
30-Aug-2025