உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி கூட்டத்தொடர் இன்று துவக்கம்; சுமுகமாக நடத்த மத்திய அரசு ஆலோசனை!

பார்லி கூட்டத்தொடர் இன்று துவக்கம்; சுமுகமாக நடத்த மத்திய அரசு ஆலோசனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதான கமிட்டி அறையில், நேற்று (நவ.,24) காலை 11:00 மணிக்கு அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்றது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், இன்று (நவ.,25) துவங்கி, டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, குறிப்பாக, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற அரசு முனைப்புடன் இருக்கிறது.இந்த சூழலில், நேற்று (நவ.,24) காலை 11 மணிக்கு பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதான கமிட்டி அறையில் அனைத்து கட்சிக் கூட்டம் கூடியது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து எதிர்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

xyzabc
நவ 24, 2024 13:07

பஜ்ஜி வடை கோஷ்டி இருக்கும் வரை சாந்தம் இல்லை


enkeyem
நவ 24, 2024 13:04

சுமுகமாக நடக்குமா? வாய்ப்பே இல்லை. அதான் ஏற்கெனவே அமேரிக்கா கிளப்பிய அதானி கைது விவகாரத்தை வைத்து எதிர் கட்சிகள் கூச்சல் போட்டு களேபரம் செய்வார்கள்


Balasubramanian
நவ 24, 2024 12:23

சுமுகமாகவா? ஒன்று அதானி ! மற்றொன்று மஹாராஷ்டிரா? ஒன்று டாஸ்மாக் மற்றொன்று தேள் கடி !! இவை போதுமே துள்ளிக் குதித்து தொடரை முடக்க! மணிப்பூர் அடக்கி வாசிக்க படும்! ஏனெனில் ப.சி ஏற்கனவே மூக்கு உடைபட்டு விட்டார்!


anuthapi
நவ 24, 2024 12:22

அதானி பிரச்னை ஒன்று போருமே


Ramesh Sargam
நவ 24, 2024 12:05

சுமுகமாக நடத்தவிடமாட்டார்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர். கூடிய சிறிது நேரத்துக்குள்ளேயே கூச்சல் போட்டு, கும்பலாக வெளியேறிவிடுவார்கள்.


Kasimani Baskaran
நவ 24, 2024 11:49

வின்சியின் பிரிட்டிஷ் குடியுரிமையை வைத்து அவரை பாராளுமன்றத்துக்குள் நுழையவிடக்கூடாது. இல்லை என்றால் இந்திய தொடருபுடைய அணைத்து நாட்டினர்களையும் பாராளுமன்றத்துக்கு போட்டியிட அனுமதிக்க வேண்டும்.


J.Isaac
நவ 24, 2024 14:08

ராகுலை தவிர நம் நாட்டில் அனைத்து அரசியல்வாதிகளும் யோக்கியர்கள் ,முக்கியமாக பி ஜேபியில்.


முக்கிய வீடியோ