உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு

பார்லி குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பார்லியின் இரு அவைகளும் இன்று ஒத்திவைக்கப்பட்டன.பார்லியில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி, வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு உட்பட பல்வேறு விவாதங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.இந்த சூழலில் இன்று (டிச 12) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியது. அவை கூடியதும், முன்னாள் சபாநாயகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பாஜ எம்பி அனுராக் தாக்குர் நேற்று தெரிவித்த இ-சிகரெட் குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபாவில் கூச்சல், குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கேட்காததால், அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார். ராஜ்யசபாவிலும் எஸ்ஐஆர் உள்ளிட்ட விவாதங்களை நடந்த வலியுறுத்தி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்யசபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Skywalker
டிச 12, 2025 21:49

The opposition left the parliament to smoke cigarettes in peace


Sridhar
டிச 12, 2025 17:54

எதிர் கட்சியினர் மக்களின் விரோதிகள். நேரம் பணம் விரயம். வெளி நாட்டினரின் பிரதிநிதிகளோ என்கிற சந்தேகம் வருகிறது.


Vasan
டிச 12, 2025 16:16

Waste of time, money, energy, and everything.


N S
டிச 12, 2025 15:51

பாராளுமன்ற எதிர்க்கட்சி அவைத்தலைவர் கையில் எப்பொழுதும் சிவப்பு கலர் அட்டையுடன் "அரசியல் சாசனம்" புஸ்தகம் இருக்கும். அவ்வப்பொழுது கூட்டங்களிலும், வெளிநடப்பு சமயத்திலும் எடுத்து காட்டுவார். உள்ளே என்ன இருக்கு என்பது அவருக்கே தெரியாது. இந்தியர்களின் தலை விதி


Arul Narayanan
டிச 12, 2025 18:58

வெற்று காகிதங்கள்.


V.Mohan
டிச 12, 2025 14:57

ஏன் இவ்வளவு அபத்தமாக எம்.பி.க்கள் நடந்து கொள்ள வேண்டும். பார்லிமெண்ட் புரொசீஜர் படி நடக்க விருப்பமில்லாதவர்கள் எம். பி. களாக இருக்க லாயக்கற்றவர்கள். மெஜாரிடி கிடைத்து ஆட்சி நடத்தும் கட்சி யானது எதிர்கட்சிகளின் எண்ணப்படி எப்படி சபையை நடத்தும்?.நீங்க பரொசீஜர்பட நோட்டீஸ் கொடுத்து அதற்கு சபாநாயகர் தரும் நேரத்தில் பொதுவான நன்கு பேச தெரிந்த உறுப்பினரை வைத்து உங்களது எதிர்ப்புகளை பதிவு செய்யலாம். அதை விட்டு சும்மா கூச்சல் போட்டு குழப்பம் பண்ணி, உங்கள் கருத்துகள் சபை குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டால் தான் பிரயோசனம். . இப்படி கழப்பம் பண்ண தலைமை ஏற்கும் காங்கிரஸின் எண்ணம் பாராளுமன்ற ஜனநாயகம் அழிய வேண்டும் என்பதே. சுருக் என்று மனதில் தைக்கும் விதமாக பேசினால் மட்டும் மக்கள் நினைவில் கொள்வார்கள். அதைவிட்டு கேவலமாங ஜனநாயக முறைகளை நாறடிக்கும் எதிரிக்கட்சிகள் இனி ஒரு முறை ஆட்சிக்கு வர இயலாது


Ramesh Sargam
டிச 12, 2025 13:42

எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பார்லியின் இரு அவைகளும் இன்று ஒத்திவைக்கப்பட்டன. இதற்குத்தான் எம்பிக்களை நாம் தேர்ந்தெடுத்தோமா? இப்படி அமளியில் ஈடுபடுபவர்களுக்கு ஏன் சம்பளம், விமான டிக்கெட், இலவச உணவு மற்றும் பல சலுகைகள்? மக்களின் வரிப்பணம் ஏன் இப்படிப்பட்டவர்களுக்கு விரயம் செய்யப்படவேண்டும்?


duruvasar
டிச 12, 2025 14:50

ஐயா முக்கியமான ஓய்வு ஊதியத்தை வுட்டுடீங்களே. இப்படி மக்கள் பணிசெய்து ஒய்வு பெற்றவர்களுக்கு ஊதியம் கொடுப்பது மக்களுடைய தலையெழுத்து க மன்னிக்கவும் கடமை


சமீபத்திய செய்தி