உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிலப் பிரச்னையில் தாயை எரித்துக் கொன்ற ‛பாசக்கார மகன் கைது

போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிலப் பிரச்னையில் தாயை எரித்துக் கொன்ற ‛பாசக்கார மகன் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அலிகார்க்: உ.பி.,யில்நிலப் பிரச்னை காரணமாக, போலீஸ் ஸ்டேஷன் முன்பு தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.உ.பி.,யின் அலிகார்க் மாவட்டத்தில் தர்கன் நகரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா(45). இவரது மகன் சுமன்(22). நிலம் ஒன்று தொடர்பாக குடும்பத்திற்குள் பிரச்னை ஏற்பட போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்கு அவர்களை போலீசார் அழைத்தனர்.போலீஸ் ஸ்டேஷன் வந்த ஹேமலதாவை, மகன் சுமன் பெட்ரோல் ஊற்றி தீவைத்ததுடன், அதனை மொபைல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதனைப் பார்த்த போலீசார் பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்தனர். 40 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்ட ஹேமலதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இதனிடையே, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஹேமலதாவே பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டை போலீசார் நிராகரித்துவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
ஜூலை 17, 2024 13:44

சட்டம் தெளிவாக இருந்தால், நில தாவா உருவாகாது. இதனை மாநிலம், தேசியம், மத அடிப்படையில் விதிகள் உருவாக்கியது தற்போதைய ராகுல் காங்கிரஸ். சொத்துக்கள் அனைத்தும் பிரச்சனையில் சிக்கி வருகின்றன. தாய் சொத்தை கேட்கும் மகன் அவள் உயிர் வாழ உணவு, உடை, இருப்பிட, மருத்துவ வசதி செய்து தர வேண்டும். இதனை அம்முல்படுத்தும் போது மகன் சொத்து வேண்டாம் என்று கூற வாய்ப்பு உள்ளது. நல்ல சமுதாயம் ஏற்படுத்திய நடைமுறை. தெளிவான சட்ட விதிகள் இல்லாமல், அரசு அதிகாரிகள் கண்காணிக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் லட்ச சொத்து தாவா வழக்கு விசாரித்து, சொத்துக்கு உரியவரை வாதம் மூலம் வெளியேற்றி வருகின்றனர். தமிழக மாநில அளவில் முன்பு வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து தீர்வு காண்பர். வருவாய் துறை பணியை வழக்கறிஞர்கள், மாநில போலீசார் மனுவை பெற்று எந்த அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்? நிர்வாக ஒழுங்கை கவனிக்க யாருக்கும் நேரம் இல்லை.


sriraju
ஜூலை 17, 2024 13:01

இவனெல்லாம் ஒரு மகனா? குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால் தூக்கில் போட வேண்டும்


Apposthalan samlin
ஜூலை 17, 2024 12:52

சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை