காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றம்
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ல் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீருக்கு மட்டும் சட்டசபை இருக்கும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, 10 ஆண்டுகளுக்கு பின் அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்று, முதல்வராக தேசிய மாநாடு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா பொறுப்பேற்றார். இதையடுத்து, நேற்று முன்தினம் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம், மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.