உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களே, உஷாராக இருங்க; கொரோனா தொற்று பாதிப்பு 2,700ஐ தாண்டியது!

மக்களே, உஷாராக இருங்க; கொரோனா தொற்று பாதிப்பு 2,700ஐ தாண்டியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 511 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனா தொற்று பரவி வருவதால், மாவட்ட சுகாதார அதிகாரிகள், தினமும் பாதிக்கப்படுவோர் குறித்த தரவுகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3pg3btdj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கும் , மஹாராஷ்டிராவில் 424 பேருக்கும் , டில்லியில் 294 பேருக்கும், குஜராத்தில் 223 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தலா 148 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் 38 பேருக்கு பாதிப்பு

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது; கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. எல்லோரையும் பரிசோதனை செய்தால், நிறைய பாதிப்புகள் கண்டறியப்படலாம். சுகாதாரத்துறையின் சார்பில் புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு 19 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் கிடைத்துள்ளது. வீரியமில்லாத ஒமிக்ரான் வகை பாதிப்புகள் தான் உறுதியாகியுள்ளது. மத்திய அரசின் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் என வழக்கமான நடைமுறைகளை தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் இணை நோயுள்ளவர்கள் முகக் கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது கட்டாயம் கிடையாது. ஆனால், இதைக் கடைபிடிப்பது நல்லது. இதுபோன்ற நேரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக வதந்திகளை பரப்பப் கூடாது. தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளது. எனவே, பதற்றப்பட வேண்டாம். தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

GoK
மே 31, 2025 12:20

பாதிக்கப்பட்டு எட்டு நாட்கள் மருத்துவ மனையில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் சிலவு செய்ததால் அதுவும் தமிழ்நாடு 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு பிரதர் தரும் ₹5 ஆண்டுக்கு காப்பீட்டு திட்டத்தை அனுமதிக்காததால், சொல்கிறேன் ...இந்த களவாணிகள் வார்த்தைகளை நம்பாதீர்கள்...இவனுக்கு உடல்நலம் குறைந்தால் லண்டனுக்கு ஓடுகிறான், துண்டில் காசு ஈர்த்தவன் குடும்பம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை