உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்; மோடி பேச்சு

ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்; மோடி பேச்சு

புதுடில்லி: ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என டில்லி பா.ஜ,, தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பிதரமர் மோடி பேசினார்.இத்தேர்தலில் பா.ஜ., 239 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதையடுத்து டில்லி, பா.ஜ., தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் வெற்றியை பா.ஜ.வினர் கொண்டாடினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d47c6gho&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் பிரதமர் மோடி பேசியது, இந்திய வாக்காளர்களுக்கு நான் பெரும் கடன்பட்டுள்ளேன். தொடர்ச்சியாக 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது தே.ஜ. கூட்டணி. பா.ஜ., மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதற்கு நன்றி.தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி. ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளோம். இந்திய மக்கள் என்மீது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒடிசாவிலும், அருணாச்சல் பிரதேசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆந்திராவில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கேரளாவிலும் மக்கள் மனதை வென்றுள்ளோம். இது நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை இத்தேர்தல் வெற்றி கொடுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Asagh busagh
ஜூன் 05, 2024 02:36

பாஜக மிக அதிக பெறுபான்மை பெற்றா ஒட்டு மிஷினை வைத்து வெற்றினு கூவி ஓலமிடுவானுங்க. அதனால இந்த முறை நிச்சயமா காங்கிரஸ் கூட்டணிகாரனுங்க தில்லுமுல்லு செய்தானுகனு உறுதியா நம்பலாம். ஜனநாயகம் தோற்றுவிட்டது.


Priyan Vadanad
ஜூன் 05, 2024 00:17

எந்த வாயிலிருந்து வருகிறது பாருங்கள்.


தமிழ்
ஜூன் 04, 2024 22:57

ஜனநாயகத்தைப்பற்றியெல்லாம் இவர் பேசுவதுதான் விந்தை.


Google
ஜூன் 04, 2024 22:22

உங்க மேல் இல்லை


Karthi Keyan
ஜூன் 04, 2024 22:17

r u shameless


Ramesh Sargam
ஜூன் 04, 2024 22:04

ஆனால் தமிழகத்தில் மட்டும் டாஸ்மாக், போதைப்பொருட்கள் மீது தமிழக மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.


அப்புசாமி
ஜூன் 04, 2024 21:50

உங்க மேலேதான்நம்பிக்கை குறஇஞ்சு போச்சுன்னு தெரியுது.


VENKATEAN V. Madurai
ஜூன் 04, 2024 21:14

தமிழகத்தில் இந்துக்களிடம் ஒற்றுமை இருந்தால் பெரும்பான்மை பெற்று இருக்கலாம்


Karthi Keyan
ஜூன் 04, 2024 22:15

We r in secular country Hinduism is not only made INDIA MIND THAT


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை