உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக ஜிஎஸ்டி வரியை மக்கள் மறக்க மாட்டார்கள்: காங்கிரஸ்

அதிக ஜிஎஸ்டி வரியை மக்கள் மறக்க மாட்டார்கள்: காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜிஎஸ்டி மூலம் அதிக வரி வசூலிக்கப்பட்டதை மக்கள் மறக்க மாட்டார்கள். இதற்காக மத்திய அரசு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலாக உள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, வருமான வரிச்சலுகை மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட அறிக்கையில், காங்கிரசின் எளிமையான மற்றும் திறமையான ஜிஎஸ்டிக்கு பதில், பாஜ அரசு 9 அடுக்குகள் மூலம் வரி வசூலிக்கும் கப்பார் சிங் வரியை அமல்படுத்தியது. இதன் மூலம் 8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது, ரூ.2.5 லட்சம் கோடி எனப் பேசி சேமிப்பு திருவிழா எனக்கூறி, பெரிய புண்ணுக்கு சிறிய பேன்ட் எய்டை பயன்படுத்த முயற்சி செய்கிறீர்கள். பருப்பு, பென்சில், தானியங்கள், சிகிச்சை, விவசாயிகளின் டிராக்டர் உட்பட அனைத்துக்கும் அதிக வரி வசூலிக்கப்பட்டதை மக்கள் மறக்க மாட்டார்கள். இதற்காக உங்கள் அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் சாசன அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலால் செய்யப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட உரிமை கோருவதற்காக நாட்டு மக்களிடம் டிவியில் உரையாற்றினார்.ஜிஎஸ்டி என்பது வளர்ச்சியை அடக்கும் வரி என நீண்ட காலமாக காங்கிரஸ் கூறி வருகிறது. அதில் அதிகளவிலான வரி வரம்புகள், அதிக நுகர்வு செய்யும் பொருட்களுக்கு தண்டனை வரி, பெரியளவு வரி ஏய்ப்பு, தவறான வகைப்படுத்துதல் போன்ற சிக்கல்கள் இருந்தன. 2017 முதல் ஜிஎஸ்டி சீர்திருத்தம் வேண்டும் எனக்கூறி வந்தோம். 2024 லோக்சபா தேர்தலின் போது இதனை வலியுறுத்தியே பாத யாத்திரை மேற்கொண்டோம்.தற்போதைய ஜிஎஸ்டி சீர்திருத்தம் போதுமானதாக இல்லை. இன்னும் பிரச்னைகள் நிலுவையில் உள்ளன.* பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறுகுறு தொழில்துறையினரின் பிரச்னை அர்த்தமுள்ள முறையில் சரி செய்யப்பட வேண்டும். முக்கிய நடைமுறை மாற்றங்களை தவிர, மாநிலங்களுக்கு இடையேயான விநியோகங்களுக்கு வரம்புகளை அதிகரிக்க வேண்டும். * ஜவுளி, சுற்றுலா, ஏற்றுமதி, கைத்தறி மற்றும் விவசாய உற்பத்தி போன்ற துறைகளில் எழுந்துள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும்.* மின்சாரம், மதுபானம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் மாநில அளவில் ஜிஎஸ்டியை அமல்படுத்த மாநிலங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.* அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாநிலங்கள் வைத்த முக்கியமான கோரிக்கை சரி செய்யப்படவில்லை.* 8 ஆண்டுகள் தாமதமான ஜிஎஸ்டி சீர்திருத்தம், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்துமா என்பதை பார்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

vadivelu
செப் 22, 2025 13:50

வரியை தீர்த்தவர்களோ வணிகர்கள்தான். நுகர்வோர் எப்போதும் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம் என்றதை உணர்ந்தவர்கள்


lana
செப் 22, 2025 12:28

gst அதிகம் என்று கூப்பாடு போடும் காங்கிரஸ் அடிமைகள் ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் state gst ஐ குறைத்து முன் மாதிரியாக இருந்தது இல்லை. gst என்றால் மத்திய அரசு என்ற மாயையை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது இந்த indi கூட்டணி. ஆனால் இதில் 50% வரி நேரடியாக மாநில அரசு க்கு செல்கிறது. மேலும் மத்திய அரசு அதிகாரிகள் ஐ விட மாநில அரசு அதிகாரிகள் தான் சிறு குறு வியாபாரிகள் க்கு அதிக பிறந்த செய்கிறார்கள். தமிழகத்தில் வணிக வரித்துறை என்று துறை தான் gst வசூல் செய்கிறது.


பேசும் தமிழன்
செப் 22, 2025 08:01

மக்களுக்கு நல்லது நடந்தால் உங்களுக்கு.. கான்கிராஸ் கட்சிக்கு பொறுக்காதே .....எதிலும் குறை கண்டுபிடிக்க வந்து விடுகிறார்கள்.


நிக்கோல்தாம்சன்
செப் 22, 2025 04:14

கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் செலுத்தும் வரி எங்கே போகிறது என்பது சாலைகளை பார்த்தல் தெரியும் , கார்கே பதில் சொல்வானா ?


Kasimani Baskaran
செப் 22, 2025 04:03

தன்னை தேசியக்கட்சி என்று சொல்லிக்கொண்டு தீம்க்கா போல வன்மத்துடன் செயல்பட்டால் - சுத்தமாக ஊத்துக்கொள்ளும் என்பது இந்த தமிழருக்கு தெரியாது போல.


Iyer
செப் 21, 2025 23:32

GST ஐ மக்கள் மறப்பார்களா மாட்டார்களா - தெரியாது. ஆனால் காங்கிரஸ் ஐ மக்கள் முழுவதும் மறந்துவிடுவார்கள். இப்போதே பல மாநிலங்களில் காங்கிரஸ் முழுவதும் மறைந்துவிட்டது


Saai Sundharamurthy AVK
செப் 21, 2025 22:47

ஜி.எஸ்.டி என்பதே காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட வரிகளை விடக் குறைவு தான். இப்போது மிகமிகக் குறைவு. காங்கிரஸுக்கு ஏன் ஜீரணம் ஆக மாட்டேன் என்கிறது. ப.சிதம்பரம், பாகிஸ்தானுக்கு நோட்டு அச்சடிக்கும் மிஷினை கொடுத்த போது மட்டும் ஜீரணம் ஆகியதா ???


V.Mohan
செப் 21, 2025 22:28

ஐயா திரு. கார்க்கே மற்றும் திரு. ஜெய்ராம் அவர்களே ஹூம் காங்கிரஸ் கட்சிக்காரங்க நீங்க வரிவிதிப்பை பற்றி பேச என்ன தகுதி உள்ளது ஐயா? உபயோகமத்த பங்களாதேசத்துக்கு விடுதலை வாங்கிதந்து, கொலைகார பாக்கிஸ்தான் ராணுவத்தினருக்கு பிரியாணியும் சம்பளமும் தருவதற்கு ""அகதிகள் வரி"" வசூலித்த உங்க உ. த்த தலைவி இந்திரா போட்ட வரிகளை விடவா? வாட்டர்ஹீட்டர், ஏ.சி. பிரிட்ஜ். கார் டூவீலர் போன்ற எல்லாம் ""லக்சுரி ஐட்டம்ஸ் என குறிப்பிட்டு மிக அதிக வரி விதித்தது காங்கிரஸ் அரசு. சிறு தொழில்களை நசுக்க தொழில் உற்பத்தி பொருட்களுக்கு எக்சைஸ் வரி, சி.எஸ்.டி. வரி, வாட்வரி, மற்றும் சர்வீஸ் டாக்ஸ் என பலப்பல வரிகள் போட்டு மக்களை டார்ச்சர் பண்ணியது காங்கிரஸ் ஆட்சி தான். முத்தாய்ப்பாக கோயிலுக்கு வரி போட்டு வசூல் பண்ணும் அசிங்கத்தை நடத்துவதும் காங்கிரஸ் தான். நீங்க சோனியா காந்தியிடம் நல்ல பேரு வாங்க அவற்றை மறைக்கலாம். எங்களுக்கு ஞாபகம் இருக்குங்க அய்யாமாரே


சாமானியன்
செப் 21, 2025 22:06

ஜி.எஸ்.டி வரி அதிகம் என்பது உண்மை. ஆனாலும் சூழ்நிலையை நோக்க வேண்டும். தற்போது உலக அரசியல் விநோதமான கட்டத்தில் உள்ளது. எந்நேரமும் உலகப்போர் வரலாம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்த சூழ்நிலை மோடிஜி, நிர்மலாஜி கூட்டணி மிக தைரியமாக வரிக்குறைப்பை செய்தது உலக சாதனை. அமெரிக்கா தற்போது எதிலெல்லாம் வரி போடலாம் என ஆராய்கிறது. இந்தியா பொருளாதாரம் சரியாக உள்ளது பற்றி காங் அரசியல்வாதிகட்கு கொஞ்சம் அறிவு குறைச்சல்தான்.


hariharan
செப் 21, 2025 21:59

காஷ்மீர் பிரச்னை, சீனாவுடனான போரில் இந்தியாவின் நிலைப்பாடு, பாக்கிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா பிடித்திருந்த இடத்தை அவர்களுக்கே திருப்பி கொடுத்தது, போபால் விஷவாயு முக்கிய குற்றவாளியை தப்பிக்க விட்டது, கச்சத்தீவு தாரைவார்த்தது, அவசரநிலைப் பிரகடனம், சீக்கியர்களை தில்லியில் நடு ரோட்டில் வெட்டி சாய்த்தது, போஃபர்ஸ் லஞ்சம், பிரயோஜனமே இல்லாத குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் என காங்கிரஸின் பல நிலைப்பாடுகளும் என்றும் நினைவில் இருக்கும், மறக்கவே முடியாது.


முக்கிய வீடியோ