உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எண்ணுார் மின் திட்ட பணிக்கு பைப் லைன் அமைக்க அனுமதி

எண்ணுார் மின் திட்ட பணிக்கு பைப் லைன் அமைக்க அனுமதி

சென்னையில், 330 மெகா வாட் மின் திட்டப் பணிகளுக்கான, 'பைப் லைன்' அமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம், சென்னை எண்ணுார் அருகே, 330 மெகாவாட் மின் திட்டத்தை மேற்கொள்ள திட்டங்களை வகுத்தது. இதற்கு எதிராக சரவணன் என்பவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஏற்கனவே வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இந்த மின் திட்ட பணிகளுக்காக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், எண்ணுார் துறைமுகத்திலிருந்து நிலக்கரி கொண்டுவர 5 கி.மீ., துாரத்திற்கு பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும்' என வாதங்களை முன் வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பைப் லைன் அமைக்கும் பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி