உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தக்கோரி மனு: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தக்கோரி மனு: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். ''அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக ஏற்கனவே எங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன'' என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.மேற்குவங்கத்தில் வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறையில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், ''மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் மனுத்தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ''இதை அமல்படுத்த ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக ஏற்கனவே எங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன'' என கூறியது. மசோதாக்கள் மீது ஜனாதிபதி திரவுபதி முர்மு முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்த சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை பா.ஜ., எம்.பிக்கள் விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

SIVA
ஏப் 22, 2025 09:01

மணிப்பூர் கலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்தீர்கள் அது ஏன், இது கலிகாலம் இன்று பணம் உள்ளவன் சொல்வது மட்டுமே உண்மை, நியாயம், மக்கள் இன்றும் விவரம் இல்லாமல் நீதி மன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று நம்புகின்றனர், அது கிடைக்கவில்லை என்றால் அவர்கள் என்ன செய்வது, அன்று மணிப்பூர் கலவரத்துக்கு தமிழகம் முழுவதும் ஒப்பாரி வைக்க பட்டது, இன்று மேற்கு வங்கத்தில் இந்துக்கள் தாக்கப்படும் போது செய்தி கூட வெளிவருவது இல்லை, மற்றவர்களுக்கு வந்தால் ரத்தம் இந்துக்களுக்கு வந்தால் அது என்ன சட்னியா ....


SIVA
ஏப் 22, 2025 08:53

ஒரு வழக்கில் ஒரு நபருக்காக இருபது வக்கீல்கள் வருகின்றனர் , ஒரு வழக்கில் ஒரு வக்கீல் ஆஜர் ஆனால் போதாதா ....


Bhakt
ஏப் 21, 2025 19:07

வழக்கு விசாரணைகளுக்கு கால கெடு விதித்தால் பொது மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் யுவர் ஆனர்.


Dharmavaan
ஏப் 21, 2025 18:16

இத்தகு காரணம் பாதிப்பு ஹிந்துக்களுக்கு முஸ்லிம்களுக்கு அல்ல எனவே நழுவல்


Dharmavaan
ஏப் 21, 2025 18:10

மோடி ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்தால் இவர்கள் தடை உத்திரவு போடுவார்கள் இல்லையேல் இது நிர்வாகம் முடிவு என்று தள்ளுபடி, முன்னேபோனால் முட்டும் பின்னே போனால் உதைக்கும் அதுதான் நீதி மன்றம் கேட்பாரில்லை


P. SRINIVASAN
ஏப் 21, 2025 17:42

முதல்ல பிஜேபி ஆட்சியை கலைக்கணும் அப்போ தான் நாடு உருப்படும்


vadivelu
ஏப் 21, 2025 19:14

அதை ஏன் இந்த ஊ மன்றம் இன்னும் செய்ய வில்லை. எதற்கு பாராளுமன்றம், இத்தனை மக்கள் பிரதிநிதிகள்? தேர்தல் எல்வாவது மிச்சம். நமக்கில்லாத அதிகாரமா..


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 21, 2025 17:00

இப்போதைய நீதிமன்றங்கள் கருத்துதான் சொல்கின்றனவே அன்றி தீர்ப்பு சொல்வதில்லை


Sivagiri
ஏப் 21, 2025 16:52

இப்போ தெளிவா தெரிஞ்சிருச்சு , கோர்ட்டுகள் , இந்தப் பக்கம் சாயுதுன்னு . . . அன்னிக்கி ஜனாதிபதிக்கு ஆர்டர் போட்டு தீர்ப்பு சொல்லிட்டு , இன்னிக்கி ஜகா வாங்கினா , சட்டம்/கோர்ட்டு - கொஞ்சம் வளைஞ்சி நெளிஞ்சு போகுதுன்னு அர்த்தம் . .?


ஆரூர் ரங்
ஏப் 21, 2025 16:24

நீதிபதிகளின் குடியிருப்பை வங்க முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். நேரடி அனுபவம் மாற்றத்தை உருவாக்கும்.


ஆரூர் ரங்
ஏப் 21, 2025 16:22

அப்போ மேற்கு வங்கத்தில் நடக்கும் இறக்குமதி மத வெறியாட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் மௌனத்தையே பதிலாக தந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் பழைய SR பொம்மை வழக்கு தீர்ப்புப்படி சட்டசபையில் மெஜாரிட்டி உள்ள எந்த மாநில அரசையும் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யவே முடியாது. என்ன அக்கிரமம் செய்தாலும் கை வைக்க முடியாது.,? இப்போதாவது அந்த தீர்ப்பை வாபஸ் வாங்கி அந்த மட்டமான தீர்ப்புக்கு வருத்தம் தெரிவிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை