வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அப்பவும் பெட்ரோல் விலை குறைந்தபாடில்லையே...
பெட்ரோல் டீசல் விலை... உயர கூடாது
மேலும் செய்திகள்
வலுவான நிலையில் ஜூன் வாகன விற்பனை
08-Jul-2025
புதுடில்லி: மின்சார, ஹைபிரிட் மற்றும் சி.என்.ஜி., கார்கள் வருகையால், இந்தியாவில் முதல்முறையாக பெட்ரோல் கார்களின் விற்பனை 50 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது.வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, பெட்ரோல் கார்களின் பங்கு, கடந்த ஜூனில் 48.2 சதவீதமாகவும், டீசல் கார்கள் பங்கு 17.9 சதவீதமாகவும் உள்ளது. கார் வாடிக்கையாளர்கள், பசுமையான மாற்று எரிபொருள் காருக்கு மாறுகின்றனர்.அதாவது, பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக, மின்சார, எல்.பி.ஜி., சி.என்.ஜி., ஹைபிரிட் கார்களை அதிகம் விரும்புகின்றனர்.இதில், சி.என்.ஜி., கார்களின் விற்பனை வேகமெடுத்துள்ளது. 2021ல், 8.5 சதவீதமாக இருந்த சி.என்.ஜி., மற்றும் எல்.பி.ஜி., கார்களின் பங்கு, தற்போது, 20.8 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.ஹைபிரிட் கார்களை விட, மின்சார கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. டாடா, எம்.ஜி., மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள், மின்சார கார் சந்தையில், 87 சதவீத பங்கு வைத்துள்ளன.https://x.com/dinamalarweb/status/1950362378178298206அடுத்த நான்கு, ஐந்து ஆண்டுகளில், பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனை மேலும் குறையும். மாற்று எரிபொருள் கார்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். சி.எஸ்.-விக்னேஷ்வர் வாகன முகவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர்
அப்பவும் பெட்ரோல் விலை குறைந்தபாடில்லையே...
பெட்ரோல் டீசல் விலை... உயர கூடாது
08-Jul-2025