உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வழிபாட்டு தலங்கள் சட்டம் வழக்கு: இ.கம்யூனிஸ்ட் இடையீட்டு மனு

வழிபாட்டு தலங்கள் சட்டம் வழக்கு: இ.கம்யூனிஸ்ட் இடையீட்டு மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழிபாட்டு தலங்கள் சட்டம் - 1991ல் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் இது தொடர்பாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் 2022ல் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்குகள் மீது, நீண்ட நாட்களாக விசாரணை எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும், சில தனிநபர்கள் சார்பிலும் இந்த சட்டத்தில் எந்த மாற்றங்களும் செய்ய கூடாது.இச்சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த அனைத்து மனுக்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தன் நிலைப்பாட்டை நான்கு வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என, கடந்த 12ம் தேதி உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் வழக்கறிஞர் ராம்சங்கர், உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், 'வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கில் எங்களையும் மனுதாரராக இணைக்க வேண்டும்.'இந்த விவகாரத்தில் எங்களது தரப்பில் எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 15, 2024 12:28

மழை பேயும் என்று கணிக்க முடியாத ஒன்றிய அரசு...


N Sasikumar Yadhav
டிச 15, 2024 16:40

அந்த மழையை வைத்து பொதுமக்களின் வரிப்பணத்தை சூறையாடும் திராவிடமாடல் அரசு


Sundar R
டிச 15, 2024 11:29

கம்யூனிஸ்ட்கள் அரசு அலுவலகங்களில் தன் வேலையைத் தாண்டி அடுத்தவன் வேலையைச் செய்ய மாட்டானே இங்கு மட்டும் எப்படி செய்கிறான்?


Barakat Ali
டிச 15, 2024 11:03

கம்யூனிஸ்ட்டுகள் குறிப்பிட்ட மதவெறுப்பாளர்கள் ....


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 10:43

300 வருடங்கள் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்த போது பிரச்னை இல்லை. 150 ஆண்டுகள் கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது பிரச்னை இல்லை 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆண்ட போதும் பிரச்சனை இல்லை. ஒரு சீக்கியர் பிரதமராகவும், இஸ்லாமியர் ஜனாதிபதியாகவும் இருந்த போதும் பிரச்னை இல்லை. 12 ஆண்டுகளாக மத வாதத்தை உயர்த்திப் புடிக்கும் பாஜக ஆட்சி துவங்கியது முதல் பிரச்சனை என்றால், என்ன தவறு, எங்கே என்று புரிகிறதா?


ஆரூர் ரங்
டிச 15, 2024 13:53

முகலாயர் பிரிட்டிஷ் ஆட்சிகளில் ஹிந்துக்களின் நிலங்களைப் பிடுங்கி வக்ஃபு க்கும் மதமாற்ற நிறுவனங்களுக்கும் தானம் கொடுக்கவில்லையா? அந்த நிலங்களை அரேபியா ஐரோப்பாவிலிருந்தா எடுத்து வந்தார்கள்? 5 லட்சம் இந்தியர்களை பட்டினியில் சாக வைத்து தானியங்களை உலகப் போர் ராணுவத்துக்கு எடுத்துச் சென்றது ஆங்கிலேயர்கள். அவர்களை நல்லவர்களெனக் கூறுபவர்கள் உடலில் ஓடுவது பாரத ரத்தமாக இருக்காது.


தத்வமசி
டிச 15, 2024 10:37

குட்டையை குழப்புவதே இவர்களுக்கு தொழிலாகி விட்டது. அரை சதவிகிதம் கூட ஓட்டு வங்கியில்லாத ஒரு கட்சி ஒட்டுண்ணியாக இருந்து கொண்டு பல சேட்டைகளை செய்ய வேண்டியது. வழிபாட்டு தளத்தைப் பற்றி கடவுள் மறுப்பாளர்களான கம்யுநிசுட்டுக்கு என்ன கவலை.


GMM
டிச 15, 2024 08:53

1947 முன்னும் பின்னும் ஆக்கிரமிப்பில் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களை பாதுகாக்க 1991 ல் சட்டம் இயற்றுவது தவறு. மத, அரசியல் உள்நோக்கம் கொண்டது. ? இது நேர்மையான சட்டம் ஆகாது. ஏராளமான வழிபாட்டு ஸ்தலங்கள் சுதந்திரத்திற்கு பின் நிலம் வாங்கி, தானம் பெற்று கட்டப்பட்டு உள்ளன. அவைகள் மீது எந்த புகாரும் இருக்காது. உள் நுழையும் நாஸ்திக கூட்டம் முகமூடி விலகும்


Dharmavaan
டிச 15, 2024 08:33

கம்யூனிஸ்டுகளின் காலம் ஏங்குவது முஸ்லீம் கிருஸ்துவ ஓட்டுகளுக்கு வக்காலத்து வாங்க தெய்வ நம்பிக்கையை கொள்கையால் அல்ல


தமிழ்வேள்
டிச 15, 2024 08:27

நாத்திக கம்யூனிஸ்ட் பயல்களுக்கு கோவிலைப் பற்றி என்ன அக்கறை? மசூதி சர்ச் களில் நடக்கும் அட்டூழியங்களை பற்றி பேச துணிவு இருக்கிறதா? இந்த உண்டி குலுக்கி கேடர்களுக்கு?


Ashok Subramaniam
டிச 15, 2024 08:20

கடவுளை நம்பாத கம்யூனிஸ்ட்டுகளுக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் எவ்வித தார்மீக உரிமையில்லை, இந்துமதம் சம்பந்தமான வழக்குகளில். அவர்கள் எந்த மதத்திற்கு சார்பாகவும், எதிராகவும் பேசக்கூடாது. சிறுபான்மை ஓட்டுக்காகப் பேசும் கட்சியினரும், முஸ்லீம்லீக் போன்ற கட்சிகளுக்கும் இங்கு பேச அதிகாரமில்லை


Kasimani Baskaran
டிச 15, 2024 08:17

வழிபாட்டு தலங்கள் சுதந்திரம் வாங்கிய பொழுது என்ன நிலையில் இருந்ததோ அதை தொடரவேண்டும் என்றால் ஏற்கனவே வழக்கு இருந்த தலங்கள் பற்றிய வழக்குகள் தொடர வேண்டும் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். கூடுதலாக நீதிமன்றத்துக்கு சட்டம் போடவோ அல்லது சட்டவிரோதமாக ஆணைகள் பிறப்பிக்கவோ அதிகாரம் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை