உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "இனி வரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம்"

"இனி வரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம்"

புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையில் இடம்பெற்றுள்ளதாவது:*மத்திய பட்ஜெட் இந்தியாவை புதிய பாதையில் அழைத்துச் செல்லும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=75fvzsxx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0*உலக பொருளாதாரத்தில் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது.*கோவிட் பெருந்தொற்று, உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.*உற்பத்தி, சேவைகள், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.*உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படுகிறது.*பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3,20,000 கோடி மதிப்பிலான உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.*உலக சந்தையில் இந்திய உணவு பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.*வளர்ந்த இந்தியாவின் அத்தியாயம் புதிய பார்லியில் எழுதப்படும்*எந்தளவு நாம் தற்சார்பு அடைகிறோமோ அந்தளவு விவசாயிகள் வளம் பெருகும்*சிறுதானிய கேந்திரமாக இந்தியா மாறி உள்ளது.*இனி வரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம்*வடகிழக்கு மாநிலங்கள் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன.*நாட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது*பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது*பெண்களின் திறனை அதிகரிக்க அரசு முயற்சி*அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு பெருகுகிறது.*ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி என்பதே அரசின் நோக்கம். இதனால் உலகளவில் முதலீட்டை ஈர்க்க முடியும்*நாட்டில் உள்ள 21 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது*உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வுஅளித்து வருகிறது* 3வது ஆட்சி காலத்தில் மேலும் 3 கோடி வீடுகள் இலவசமாக கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K.n. Dhasarathan
ஜூன் 27, 2024 21:25

விவசாயிகளின் போராட்டத்தை இரண்டு வருடமாக வேடிக்கை பார்த்த, பிரதமர் எப்படி விவசாயிகளின் நண்பர்? அவர்களை எட்டி பார்க்கவோ, குறைந்தது ஒரு அமைக்சிறைக்கூட அனுப்பாதவர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்ப்பது வேஸ்ட். அவர் எண்ணமெல்லாம் விவசாயிகளை முன்னேற்ற அல்ல, பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்க, அறநூறாவது இடத்தில் இருந்த அதானி இன்று முதலிடம் , உண்டா இல்லையா


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 16:12

140 கோடி வயிறுகளை எக்காலத்திலும் இயற்கை விவசாயம் மூலம் ( மட்டுமே) நிரப்பவே முடியாது. நடைமுறை சாத்தியமல்ல.


Sree
ஜூன் 27, 2024 12:35

தமிழ்நாட்டில் சுமார் இரண்டு கோடி பெண்களின் மாதாந்த்ரா வருமானம் ரூபாய் 8500 எனில் அவர்களின் வருட வருமானம் ஒருலக்சம் . எப்பவோ இவர்கள் லச்சாதிபதிகள்


Narayanan Muthu
ஜூன் 27, 2024 13:32

சரியாக புரிந்து கொள்ளுங்கள். கோடீஸ்வரர்களை லட்சாதிபதி ஆக்கும் திட்டத்தைத்தான் நடைமுறை படுத்துவார்கள்.


Lion Drsekar
ஜூன் 27, 2024 12:35

உண்மையில் ஆண்களைப்போல் அரசியலுக்கு வந்தால் லட்சாதிபதி என்ன எல்லோருமே பல கோடிக்கு அதிபதியாகலாம் . வந்தே மாதரம்


Pandi Muni
ஜூன் 27, 2024 13:00

கொள்ளையடிக்கிறதிலேயே குறியா இருங்க


Subramanian Nagarajan
ஜூன் 27, 2024 12:09

Most of the beneficiary schemes have not reached or understood by bottom chunk of illiterate commoner who forms major chunk of vote bank


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை