உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகரங்கள் சூறையாடல், அப்பாவி மக்கள் படுகொலை: கஜினி முகமது படையெடுப்பில் நடந்தது இதுதான்!

நகரங்கள் சூறையாடல், அப்பாவி மக்கள் படுகொலை: கஜினி முகமது படையெடுப்பில் நடந்தது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கஜினி முகமதுவின் படையெடுப்புகள் குறித்து 7 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் மத்திய அரசின் தேசியக் கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைப்பு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதிக விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.'Exploring Societies: India and Beyond' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் மதுரா மற்றும் சோமநாதர் நகரங்களில் அடிக்கப்பட்ட கொள்ளை குறித்து விரிவாக தோற்கடிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:முகமது கஜினியின் பிரசாரங்கள் அழிவு மற்றும் கொள்ளையை பற்றி இருந்தது. பல்லாயிரக்கணக்கான அப்பாவி இந்திய மக்கள் கொல்லப்பட்டனர். மத்திய ஆசியாவின் அடிமைச் சந்தைகளில் குழந்தைகள் மற்றும் கைதிகள் விற்பனை செய்யப்பட்டனர்.வரலாற்று ஆசிரியர்கள் அவரை சக்திவாய்ந்த ஆனால், கொடூரமான மற்றும் இரக்கமற்ற தளபதியாக குறிப்பிடுகின்றனர். ஹிந்துக்கள், பவுத்தர்கள் மற்றும் சமண மதத்தை சேர்ந்தவர்களை படுகொலை செய்வது அல்லது அடிமைப்படுததுவதிலும், இஸ்லாம் போட்டி பிரிவுகளை சேர்ந்தவர்களை கொல்வதிலும் கஜினி முகமது உறுதியாக இருந்தார். இந்தியா மீது கஜினி முகமது 17 முறை படையெடுப்புகளை மேற்கொண்டார். ஒவ்வொரு முறையும் ஏராளமான பொக்கிஷங்களை கொள்ளையடித்து சென்றார்.கஜினி முகமதுவுக்கு வலுவான எதிர்ப்பு இருந்தது. பல சந்தர்ப்பங்களில் தோல்வியில் இருந்து நூலிழையில் தப்பித்தாலும் அவரது பெரிய ராணுவத்தின் படையெடுப்பும், குதிரை வீரர்களின் ஆதரவுடன் துணிச்சலான குதிரைப்படை தாக்குதல்களும் தீர்க்கமானவையாக இருந்தது.கண்ணூஜ் நகருக்கு செல்வதற்கு முன்பு கஜினி முகமது, கோயில்களை இடித்து தள்ளிவிட்டு, அங்கு கொள்ளையடித்து சென்றார். அங்கு பல கோயில்களை கொள்ளையடித்து அழித்தார். பிறகு மற்றொரு படை எடுப்பு மூலம் குஜராத்தின் சோமநாத்திற்கு படையெடுத்து சென்றார். அங்கு அவருக்கு உள்ளூர் மக்களிடம் வலுவான எதிர்ப்பு இருந்தது. அவரது படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டன. இருப்பினும் பல நாட்கள் சண்டைக்கு பிறகே கஜினி முகமதுவுக்கு வெற்றி கிடைத்தது. அங்கிருந்த சிவன் கோவிலை அழித்ததுடன், அங்கிருந்த பொக்கிஷங்களை கொள்ளையடித்து சென்றார் என அந்த புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது.மேலும் இந்தியாவின் அறிவியல் மரபுகளில் கஜினி முகமதுவின் ராணுவ பிரசாரங்களின் தாக்கத்தை குறிப்பிட்ட பாரசீக அறிஞர் அபு ரெய்ன் அல்பிருனியின் கூற்று மேற்கொள் காட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Venugopal S
டிச 08, 2025 12:04

இன்னும் எத்தனை காலம் தான் இது போல் உருட்டிக் கொண்டே இருக்கப் போகின்றனர்?


Indhiyan
டிச 08, 2025 02:39

அசோகர் எந்த கோவில்களை இடித்தார்? ராஜராஜன் படையெடுத்து அரசை விரிவாக்கம் செய்ததை போல் அசோகரும் செய்தார். மத அடிப்படையில் இல்லை. கேடு கெட்ட முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கோவில்களை இடிப்பதிலும் ஹிந்துக்களை கொல்வதிலுமே ஈடுபாட்டார்கள். ஹம்பி சென்று பாருங்கள். லக்ஷக்கணக்கான சிற்பங்களை உடைத்து கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லா அரக்கர்கள். ஒன்றா இரண்டா? பலப்பல முஸ்லீம் அரக்கர்கள் இந்தியா முழுவதும் பேயாட்டம் ஆடினார்கள். அவர்களது மதம் இப்படி செய்யச் சொன்னதா?


xyzabc
டிச 08, 2025 01:55

அன்பில் மகேஷ் படிக்க வேண்டிய விஷயம். ஏறாது தலையில்


ராஜ்
டிச 07, 2025 23:51

கஜினியும் வடக்கு வளராதுக்கு காரணம் வடக்கில் உள்ளவர்களின் செல்வங்களை கொள்ளை அடித்தான்


Venkat esh
டிச 07, 2025 22:13

சிறுபான்மையினர் வாலை வருடி விட்டு அவர்கள் ஓட்டையையும் வாங்கி எங்கள் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் வயிறு நிரம்ப சாப்பிட சேவகம் செய்ய மாடல் கூட்டத்தினர் சபதம் எடுத்துள்ளனர்


SULLAN
டிச 07, 2025 21:07

நல்ல தமாஷ்.


Vijay
டிச 07, 2025 21:00

பிஜேபி மற்றும் ஹிந்து இயக்கங்கள் எவ்வளவு போராடினாலும் வீண். ஸ்டாலின் பலமே தன் கட்டுபாட்டில் உள்ள ஊடகங்கள் மூலம் ஹிந்துக்களுக்கு மதச்சார்பின்மை என்ற பெயரில் சூடு சுரணை வராமல் பார்த்து கொள்வது தான்.


sundarsvpr
டிச 07, 2025 20:50

லாகூரை கைப்பற்றினோம் விட்டு கொடுத்தோம் யார் காரணம்? கட்ச தாரை வார்த்தது நேரு குடும்ப வாரிசு. இதற்கு உரு துணை முத்துவேல் கருணா நிதி


தத்வமசி
டிச 07, 2025 20:44

எந்த நாட்டு குழந்தைகளும் தன நாடு அடிமையாக்கப்பட்ட கதையை படிப்பதில்லை. தன்னை அடிமை செய்து அரசாட்சி நடத்தியவர்களை பெருமையாக பாடப் புத்தகங்களில் எழுதுவதில்லை. அவர்களை எதிர்கொண்டு விரட்டி அடித்த சரித்திரத்தை மட்டுமே படிப்பார்கள். வெளிநாட்டவர்கள் விட்டுச் சென்ற எச்சங்களை பாதுகாப்பதில்லை. அதைப் பற்றி மாணவர்களின் பாட நூல்களில் வைத்து போற்றுவதும் இல்லை. அவர்கள் வைத்த ஊரின் பெயர்களை போற்றிப் பாதுகாப்பதில்லை, நினைவுச் சின்னங்களாக வைத்து கண்காட்சி நடத்துவதில்லை. ஆனால் இந்தியாவில் எல்லாம் தலைகீழ். காங்கிரஸ் எனும் கட்சி சுதந்திரத்திற்காக் உழைத்து என்று மார் தட்டிக் கொண்டால் இந்தியாவில் இன்று நடக்கும் அனைத்து மத விவகாரங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பு. சுததித்தின் போது பல சிக்கல்களை தீர்த்து விட்டிருக்க வேண்டும். நெருப்பு, கடன், எதிரி இவை மூன்றையும் மிச்சம் மீதி இல்லாமல் அழிக்க வேண்டும். இல்லையென்றால் அவை பிறகு விசுவரூபம் எடுத்து நமக்கே தொந்திரவாக அமையும் என்பதைத் தான் இந்த எச்சங்கள் நமக்கு சொல்கின்றன.


rama adhavan
டிச 07, 2025 20:34

இதற்கு திராவிடர்களின் கருத்தையே காணோமே, பதுங்கி விட்டார்களா?


Ramamoorthy M
டிச 07, 2025 21:05

அது வேற ஒண்ணுமில்லை. மதச்சார்பின்மையாம். இது தான் திருட்டு திராவிடம்


புதிய வீடியோ