உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு வங்கிக்காக ராமரை வெறுக்கின்றனர்; ராகுல், லாலு மீது பிரதமர் மோடி பாய்ச்சல்

ஓட்டு வங்கிக்காக ராமரை வெறுக்கின்றனர்; ராகுல், லாலு மீது பிரதமர் மோடி பாய்ச்சல்

பஹல்பூர்: “பீஹாரில், ஓட்டு வங்கிக்காக தான் ராகுலும், லாலு குடும்பத்தினரும் ராமரை வெறுக்கின்றனர்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீஹாரில், 121 சட்டசபை தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நேற்று முடிந்தது. இறுதி கட்ட தேர்தல் வரும் 11ம் தேதி நடக்க உள்ளது. 20 மாவட்டங்களில் உள்ள, 122 தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஓட்டளிக்க உள்ளனர். அதிவிரைவு சாலை அதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பஹல்பூர் மற்றும் அராரியா மாவட்டங்களில் நேற்று அடுத்தடுத்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி பேசியதாவது: பீஹாரில், 15 ஆண்டுகள் நடந்த காட்டாட்சியால் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை. நெடுஞ்சாலை, பாலம், உயர்கல்வி நிறுவனங்கள் எதுவும் அமையவில்லை. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதை மாற்றியது. இன்று அதிவிரைவு சாலைகள், பாலங்கள், நான்கு மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் விரட்டியடிக்க நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால் காங்கிரஸ்- - ராஷ்ட்ரீய ஜனதா தளம் அவர்களுக்கு பாதுகாப்பு தருகிறது. ஆட்சிக்கு வந்தால் அவர்களை பின்வாசல் வழியாக மாநிலத்திற்குள் நுழையவிடுவர். இது, நாட்டு மக்களுக்கே பாதிப்பு. காங்கிரசில் குடும்ப பெயரை வைத்து அரசியலில் இருப்பவர்கள், சத் பூஜையை நாடகம் என்கின்றனர்.காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தினர் அயோத்தி ராமர் கோவிலுக்கு தான் செல்வதில்லை என்றால், அங்கு உள்ள நிஷாத் ராஜ், சபரி மாதா, வால்மீகி சன்னிதிகளுக்கு கூட செல்வதில்லை. இது அவர்களிடம் இருக்கும் தலித், பிற்படுத்தப்பட்டோர் வெறுப்பை காட்டுகிறது. சமூக நீதி ஓட்டு வங்கிக்காக ராகுலும், லாலு குடும்பத்தினரும் ராமரை வெறுக்கின்றனர். இந்த தேர்தலில் பீஹார் இளைஞர்கள், முதியோர், குறிப்பாக பெண்கள் உற்சாகமாக ஓட்டளிக்கின்றனர். ஒரு ஓட்டு சமூக நீதியை உருவாக்கியது; அதே ஓட்டு காட்டாட்சியை விரட்டியது. மீண்டும் காட்டாட்சி வராமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

அப்பாவி
நவ 07, 2025 12:13

கோஷத்தை மாத்துனது யாரு


kamal 00
நவ 07, 2025 12:28

திமுக போய் திராவிட மாடல் போய் இன்பா மாடல் மாதிரி யா


Venugopal S
நவ 07, 2025 10:28

ஓட்டு வங்கிக்காக ராமரை விரும்புவதும் தவறு தானே?


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 07, 2025 11:35

ராமரைத் தூக்கிப்பிடிப்பதே ஓட்டுக்காக என்றால் சேது பாலம் கட்ட ராமன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தான் என்று எகத்தாளமாகக் கேட்பதும் மத அடிப்படைவாத ஓட்டுக்காகத்தானே >>>>


kamal 00
நவ 07, 2025 12:27

திராவிட கொத்தடிமை யின் கூற்று


kamal 00
நவ 07, 2025 12:29

முனகல் அது


ramesh
நவ 07, 2025 09:52

கடவுள் ராமரை எந்த கட்சியினரும் வெறுக்க வில்லை . கடவுளை வைத்து அரசியல் செய்பவர்களை தான் எதிர்க்கிறார்கள் .


kamal 00
நவ 07, 2025 12:31

எந்த இளவரசர் நாடாளுமன்றதில் கடவுள் போட்டோ எடுத்து விளையாட்டு காட்டியது


அரசு
நவ 07, 2025 07:12

உங்களை விட அவர்கள் எவ்வளவோ மேல்.


vivek
நவ 07, 2025 08:59

என்ன செய்ய....


Priyan Vadanad
நவ 07, 2025 07:02

ராமரை ராகுலோ லாலுவோ வெறுக்கவில்லையென தெரிந்திருந்தும்


ஜெய்ஹிந்த்புரம்
நவ 07, 2025 07:01

அஜித் பவார் மகனால் மஹா., முதல்வர் பட்னவிசுக்கு சிக்கல் பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு சொற்ப விலை முத்திரைத்தாள் கட்டணத்தால் அம்பலமான உண்மை


kamal 00
நவ 07, 2025 12:31

ரெடி யா இருக்கார்


Priyan Vadanad
நவ 07, 2025 06:52

இன்னுமா பொழப்பு நடத்தவேண்டும்?


ஜெய்ஹிந்த்புரம்
நவ 07, 2025 06:45

அதே வோட்டுக்காக தேவையில்லாமல் ராமரை தலையில் வைத்து ஆடுகிறார்.


பேசும் தமிழன்
நவ 07, 2025 07:19

அட நீங்க அதே ஓட்டுக்காக .....நமது நாட்டு மக்களுக்கு மட்டுமே இருக்க வேண்டிய ஓட்டுரிமையை பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஊடுருவி வந்து இருக்கும் ஆட்களுக்கும் ஓட்டுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறுவதை எந்த கணக்கில் சேர்ப்பது ??


kamal 00
நவ 07, 2025 12:32

மிக சரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை