உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்ஜெட் மிகவும் சிறப்பு! அமைச்சர் நிர்மலாவை பாராட்டிய பிரதமர் மோடி

பட்ஜெட் மிகவும் சிறப்பு! அமைச்சர் நிர்மலாவை பாராட்டிய பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; பட்ஜெட் மிகவும் நன்றாக உள்ளது, உங்களை எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறி உள்ளார். 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். 1 மணிநேரம் 15 நிமிடங்கள் அவையில் அவர் உரையாற்றினார். பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். தொடர்ந்து 8வது முறையாக அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; அனைவரும் உங்களை பாராட்டுகிறார்கள், பட்ஜெட் மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறினார். பார்லிமென்டில் அமைச்சரின் இருக்கைக்கு நடந்து சென்ற பிரதமர், தனது 8வது மற்றும் மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு நன்றி என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mediagoons
பிப் 01, 2025 18:08

அணைத்திலும் தோல்வியடைந்த மோடி எழுதுகொடுத்ததை வாசித்ததற்கு தனக்கு தானே நன்றிதெரிவித்துகொல்வது போல


Sudha
பிப் 01, 2025 17:29

இது ஒரு போலீயாக இல்லை?சலுகைகள் மற்றும் வரிகளை அறிவிப்பது நிதி அமைச்சர் சுதந்திரமா? நம்ப முடியவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை