உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 நாள் பயணமாக ரஷ்யா, ஆஸ்திரியா செல்கிறார் பிரதமர் மோடி

3 நாள் பயணமாக ரஷ்யா, ஆஸ்திரியா செல்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி, 3 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா, ஆஸ்திரியா செல்கிறார்.ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில் வரும் 8 ம் தேதி மாஸ்கோ செல்லும் பிரதமர் மோடி, இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இரு நாட்டு உறவுகள், சர்வதேச மற்றும் பிராந்திய உறவுகள் குறித்தும் புடினுடன் ஆலோசனை நடத்தும் மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.இதன் பிறகு 9ம் தேதி ஆஸ்திரியா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் வேன் டெர் பெலனை சந்தித்து பேசுகிறார். அந்நாட்டு வர்த்தகர்களையும் சந்திக்கும் மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அங்கிருந்து 10ம் தேதி பிரதமர் தாயகம் கிளம்புகிறார். 41 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரியா செல்லும் முதல் பிரதமர், நரேந்திர மோடி ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.n. Dhasarathan
ஜூலை 04, 2024 21:25

ஆரம்பிச்சுட்டார் ஐயா நாடு எக்கேடு கேட்டால் எனக்கென்ன ? பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு கூட சரியான பதில் கூறாமல், மற்றவரை தூற்றுவதே கொள்கை என்பவர் வேறு என்ன செய்வார்? தவிர மஹுவா மொய்த்தரா பேச ஆரம்பித்ததும் என்னவொரு ஓட்டம், மக்கள் நன்றாகவே ரசித்தார்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை