மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கும் மஹா., உள்ளாட்சி தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி நெகிழ்ச்சி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வளர்ச்சிக்கான எங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையை மஹாராஷ்டிரா மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களின் உள்ளாட்சி தேர்தல் வெற்றிகள் பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிரா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாஜ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக, ஓட்டளித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்து அவர் விடுத்த பதிவில், ' மஹாராஷ்டிரா மக்கள் வளர்ச்சியுடன் உறுதியாக நிற்கின்றனர். நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துத் தேர்தல்களில் பாஜ மற்றும் மகாயுதி கூட்டணியை ஆசிர்வதித்த மஹாராஷ்டிரா மக்களுக்கு நன்றி. வளர்ச்சிக்கான எங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. மஹாராஷ்டிரா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த பாஜ மற்றும் மகாயுதி தொண்டர்களுக்கு பாராட்டுக்கள்,' எனக் குறிப்பட்டுள்ளார்.அதேபோல, அருணாச்சல பிரதேச உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அவர் விடுத்த பதிவில் கூறியிருப்பதாவது; நல்லாட்சி வழங்கிய அரசுக்கு அருணாசலப் பிரதேச மக்கள் அசைக்க முடியாத ஆதரவைக் கொடுத்துள்ளனர். இது மாநிலத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றும் எங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.