உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு நிறைவு விழா; அஞ்சல் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி

டில்லியில் ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு நிறைவு விழா; அஞ்சல் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி

புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்று (அக் 01) தொடங்கியது. டில்லியில் நடந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார்.கடந்த 1925ல், மஹாராஷ்டிராவின் நாக்பூரில் டாக்டர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார், ஆர்.எஸ்.எஸ்., என்றழைக்கப்படும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை துவங்கினார். தன்னார்வலர்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, கலாசார விழிப்புணர்வு, ஒழுக்கம், சேவை, சமூக பொறுப்புணர்வு உள்ளிட்ட பண்புகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் துவங்கி நடைபெற இருக்கின்றன. டில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்று (அக் 01) காலை 10.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இதில், தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.இந்நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, நாட்டிற்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

முக்கிய பங்கு

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பு 100 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல. ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுக்கால பயணம் முன்னோடியில்லாதது.100 ஆண்டு கால மகத்தான பயணம் தேசத்தின் வளர்ச்சியை கட்டியெழுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு பல சேவைகளை செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் என்பது தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம். நானும் ஆர்எஸ்எஸ் அமைப்பை வேராக கொண்டவன் தான். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V Venkatachalam
அக் 01, 2025 18:06

மோடிஜி ஆர் எஸ் எஸ் ல் வளர்ந்தவர். மிகச்சிறந்த தேச பக்தர். இன்று வரை அவர் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. இந்தியாவில் மட்டுமே பயிற்சி செய்து யோகாவை உலகிற்கு அறிமுகப்படுத்தி அதன் சிறப்பை உலகறியச் செய்தவர். மிகச்சிறந்த கண்ணிய வான். ஓய்வின்றி தேசத்துக்கு உழைப்பவர். தனக்கு என்று எதுவும் இல்லாதவர். அவர் இந்த விழாவை சிறப்பித்தது மற்றும் தபால் தலை வெளியிட்டது எல்லாம் மகுடம் வைத்தது போல பெரும் சிறப்பு. ஆர் எஸ் எஸ் மேன் மேலும் வளர்ந்து உலகெல்லாம் வியாபிக்க வேண்டும். இந்த அற்புதமான செய்தியை எங்களுக்கு அளித்த தினமலர் வாழ்க. வாழ்க. அதன் சேவைகள் தொடரட்டும்.


Rathna
அக் 01, 2025 16:22

ஒரு நடு நிலையாளராக பார்க்கும் போது, RSS இன் முன்னோடிகளாக இருந்த ஹிந்து மகா சபா, ஜன சங்கம் இருந்திராவிட்டால் பாகிஸ்தானிய ஜிஹாதிகள் மற்றும் ஜின்னாஹ், இந்திய காஷ்மீரையும், பஞ்சாபையும் பாகிஸ்தானோடு இணைத்து இருப்பார்கள். அதற்கு ஏற்ற அரசியல் சூழல் மற்றும் தலைமையே அப்போது இருந்தது. அதேபோல இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்னால் டெல்லியில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில், RSS தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பல நூறு சீக்கிய குடும்பங்களை, பெண்களை, குழந்தைகளை காப்பாற்றினர். மொகலாயர்கள் கொடுமைக்கு எதிராக உண்டான சீக்கிய மதம், பல ஆயிரம் ஹிந்து குடும்பங்களை காஷ்மீரிலும், பஞ்சாபிலும் காப்பாற்றியது. அதற்கு நன்றியாக டெல்லியில் நடந்த செயல் இருந்தது.


RAMESH KUMAR R V
அக் 01, 2025 16:04

முற்றிலும் மாறுபட்ட தேசப்பற்றுமிக்க இயக்கத்தின் வழி பாரத கலாச்சாரம் இன்னும் புத்துயிர் பெறுகிறது . வாழ்க பல்லாண்டு.


NALAM VIRUMBI
அக் 01, 2025 15:41

ஆர் எஸ் எஸ் அமைப்பு இருப்பதாலேயே நமது பாரத தேசம் உயிர்ப்புடன் இருக்கிறது. தேச வளர்ச்சியின் ஆணி வேர் அந்த இயக்கம். அதன் மீது குறை கூறுவோர் நன்றாக இருக்க முடியாது.


P.M.E.Raj
அக் 01, 2025 13:32

பாரத அன்னை வாழ்க. RSS ன் தியாகம் என்றென்றும் நிலைத்திருக்கும். தன்னலமற்ற தியாகிகள், உண்மையான தேசபக்தர்கள். நாட்டை காக்கும் இரண்டாம் ராணுவம். பாரத் மாதாக்கி ஜெய்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை