உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: வர்த்தகம், பாதுகாப்பு குறித்து ஆலோசனை

பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: வர்த்தகம், பாதுகாப்பு குறித்து ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்க வரி விதித்துள்ள சூழ்நிலையில் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரேசிலிய பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.https://www.youtube.com/embed/VGWcxIImiyoஇது தொடர்பாக பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறுகையில், பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உட்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும். அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன் எனக்கூறியிருந்தார்.இன்று டில்லியில் நடந்த மாநாட்டிலும் பிரதமர் மோடி பேசும் போது,மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை. எந்த விலை கொடுத்தாவது இந்திய விவசாயிகளை காப்பேன் என உறுதிபடத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி, பிரேசில் அதிபருடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அமெரிக்க வரிவிதிப்பு இந்தியா, பிரேசில் இரு நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இந்த வரி விதிப்புக்கு இரு நாடுகளுமே கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

chinnamanibalan
ஆக 08, 2025 10:42

பெரிய அண்ணன் என்ற இறுமாப்பில், உலக நாடுகளின் நம்பகத் தன்மையை அமெரிக்கா படிப்படியாக இழந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை


அப்பாவி
ஆக 08, 2025 09:51

நெல்லிக்காய் மூட்டை.


Ramesh Sargam
ஆக 07, 2025 22:24

பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு. ரஷ்யா அதிபர் இந்தியா வருவார் என்று ஒரு செய்தி. சீனாவுக்கு இந்தியா பிரதமர் மோடி அவர்கள் விஜயம் சீக்கிரம். இந்தியா மீதான அதிக வரிவிதிப்புக்கு சீனா கண்டனம். ஆக மொத்தத்துல டிரம்புக்கு பலவித சங்கடம்.


SANKAR
ஆக 07, 2025 23:46

rats can not bell cat


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை