UPDATED : நவ 24, 2025 02:49 PM | ADDED : நவ 24, 2025 12:35 PM
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை (நவ.,25) கோலாகமாக நடைபெற உள்ளது. இதற்காக விழா கோலம் பூண்டுள்ளது . அயோத்தி நகர். ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தில் கொடி ஏற்றும் தர்ம த்வஜாரோஹண விழாவை முன்னிட்டு வேத ஆச்சாரியார்கள், கணபதி பூஜை, பஞ்சாங்க பூஜை மற்றும் ஷோடச மாதரிகா பூஜையை வரிசையாக நடத்தினர். இதைத் தொடர்ந்து யோகினி பூஜை, க்ஷேத்ரபால் பூஜை, வாஸ்து பூஜை, நவக்கிரக பூஜை, மற்றும் ராமபத்ர மண்டலம் மற்றும் ஆவாஹனம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் விஷ்ணு சஹஸ்ரநாமம் நடைபெற்றது. நாளை நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடிமரத்தில் கொடியேற்ற உள்ளார். தொடர்ந்து பிரதமர் ரோடு ஷோ நடைபெற உள்ளது. ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு ராம் சர்க்காரின் அற்புதமான உருவத்துடன் கோபுரம் பிரகாசிக்கிறது.