உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆக.,31 ல் சீனா செல்கிறார் பிரதமர் மோடி

ஆக.,31 ல் சீனா செல்கிறார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி வரும் ஆக.,31 அன்று சீனா செல்ல உள்ளார். கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்கு பிறகு மோடி, அந்நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில், இந்தியா சார்பில் , மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சீனா சென்று பங்கேற்றனர்.இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் 31ம் தேதியன்று பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். அப்போது, பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்தியா சீனா இடையிலான உறவு குறித்த பேச்சுவார்த்தை மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் முயற்சி எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.https://www.youtube.com/watch?v=qw-k0Eg5Ehsஇம்மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.இந்த பயணத்துக்கு முன்னதாக ஆக.,30ம் தேதியன்று பிரதமர் மோடி ஜப்பான் சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். இது முடிந்த பிறகு அங்கிருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
ஆக 06, 2025 23:17

ஏற்கனவே அதிக கோபக்காரன் அந்த டிரம்ப். இந்த சந்திப்பு வெற்றிபெற்றால், டிரம்ப்பின் கோபம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்திய பொருட்கள் மீதான வரியை 100 சதவிகிதம் ஏற்றிவிடுவார்.


Ramesh Sargam
ஆக 06, 2025 23:17

ஏற்கனவே அதிக கோபக்காரன் அந்த டிரம்ப். இந்த சந்திப்பு வெற்றிபெற்றால், டிரம்மில் கோபம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்திய பொருட்கள் மீதான வரியை 100 சதவிகிதம் ஏற்றிவிடுவார்.


Ramesh Sargam
ஆக 06, 2025 22:37

இப்பொழுது அந்த அமெரிக்க கிறுக்கு, மோடி மற்றும் ஷீ ஜின்பிங் சந்திப்பை ஏற்பாடு செய்ததே நான்தான் என்று உலரும் பாருங்க. இதற்காக எனக்கு நோபல் அமைதி பரிசு கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் பாருங்க.


Barakat Ali
ஆக 06, 2025 21:25

அமெரிக்க வரிவிதிப்பை மட்டுமே பேசுவார்கள் என்று சொல்ல முடியாது ..... மோடியும் எதிரியின் எதிரியிடம் புலம்பி அனுதாபம் தேடுவதோடு நிறுத்திக்கொள்ளும் ஆளில்லை .... என்ன பேசுவார்கள் என்று தெரியாமல் திமுகவின் அடிமைகள் கதறுவது வேடிக்கையாக உள்ளது .........


Appan
ஆக 06, 2025 20:45

டிரம்புக்கு இந்திய நன்றி சொல்லணும் . எ திரிகளாக இருந்த இந்திய , சீன , டிரம்பால் நண்பர்கள் ஆகி விட்டார்கள். இதனால் BRICS வருவது உறுதியாகி விட்டது . அமெரிக்க டாலருக்கு மாற்று கரன்சி வந்து விட்டது. இதில் பெருமை பட வேண்டியது , இந்திய இந்த மாற்றத்தை தலைமை ஏற்று செயல் பாடுகிறது. டிரம்மின் செயல் மோடிக்கு பெர்சனலாக ஒரு ஷாக் கொடுத்து விட்டது . உலகம் பெரியது . அமரிக்காவில் சிறிது சலனம் இருக்கும்.. அது போய் விடும்.


SS
ஆக 06, 2025 19:44

அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள வர்த்தக சிக்கல்களை சமாளிக்க இந்த பயணம் உதவும்.


sankaranarayanan
ஆக 06, 2025 19:34

டிரம்புக்கு எரிச்சலோ எரிச்சல் வரும் ஜாக்கிரதை ரொம்ப போனால் டிராம் இந்தியாவில் போட்ட மூலதன தொழிற்சாலைகள் என்னன்னா எங்கெல்லாம் உள்ளன எவ்வ பணம் ஈட்டுகின்றன என்ற முழு விவரத்தை யும் வெளியிட்டால் அர்ப்பனனுக்கு வந்துவிடும் அழிவு காலம்


Mecca Shivan
ஆக 06, 2025 19:31

டொனால்டு டுக்குக்கு பித்தம் தலைக்கேறிவிடும் .. 200 சதவிகிதம் வரி போடுவார்


தாமரை மலர்கிறது
ஆக 06, 2025 19:22

சீனாவுடன் நட்புறவு கொள்வோம். அமெரிக்கா ஆணவத்தை அடக்குவோம். உலகம் கிழக்கே தான் உள்ளது. வெறும் பத்து சதவீத மேற்குலக மக்கள் இவ்வுலகை ஆண்டது போதும்.


S.R.Arul
ஆக 06, 2025 18:28

It is a great move by Indian government ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை