உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடேயப்பா.. Force One! பிரதமர் மோடி செல்லும் ரயிலில் இவ்வளவு விஷயம் இருக்கா?

அடேயப்பா.. Force One! பிரதமர் மோடி செல்லும் ரயிலில் இவ்வளவு விஷயம் இருக்கா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி பயணிக்கும் Force One ரயிலில் இருக்கும் அதி நவீன வசதிகள் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கின்றன.

வரவேற்கும் நாடுகள்

உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணிப்பது என்பது எப்போதும் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக பார்க்கப்படும். அவரது வரவை பல நாடுகள் ஆர்வமுடன் எதிர்நோக்குவதோடு, தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என்று அழைப்பை விடுத்து வண்ணம் உள்ளன.

போர்க்கள பூமி

பிரதமர் மோடியின் முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு பயணங்களில் தற்போது அனைவர் பார்வையில் உற்று நோக்கப்படுவது உக்ரைன் பயணம் தான். போர்க்கள பூமியாக காட்சியளிக்கும் அந்நாட்டுக்கு அவர் இன்று பயணிக்கிறார். போலந்து சென்று அங்கிருந்து பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார்.

Force One

வழக்கமாக விமானத்தில் பயணிக்கும் பிரதமர் மோடி, இம்முறை ரயிலில் உக்ரைன் தலைநகர் கீவுக்கு பயணிக்கிறார். இதற்காக அவருக்கு சிறப்பு ரயில் ஒன்றும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதன் பெயர் Force One. விமானத்தை தவிர்த்து ரயில் பயணத்தை அவர் தேர்ந்து எடுத்துள்ள நிலையில் Force One ரயிலில் இருக்கும் பாதுகாப்பு வசதிகள், உச்சக்கட்ட தொழில்நுட்பம் வேற லெவலில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறது.

என்னென்ன வசதிகள்?

உலக அளவில் அதிக சொகுசு வசதிகள் கொண்ட ரயிலாக Force One கருதப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்கும் வி.வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பாக சிறப்பு பயிற்சிகள் பெற்ற பாதுகாவலர்கள் குழு ஒன்று பிரத்யேகமாக இருக்கும். பயணத்தின் போது வெளியில் இருந்து ஏதேனும் சவால் நிறைந்த ஆபத்துகள் நேர்கிறதா என்பதை இந்த பாதுகாவலர் குழு உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.

பிரத்யேக அறை

24 மணி நேரமும் பாதுகாப்பு பற்றிய தகவல்தொடர்புகள் பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும் வகையில் நவீன வசதிகளுடன் ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரயிலில் மிக பிரமாண்ட திரை கொண்ட தொலைக்காட்சி, உயர்ரக சோபாக்கள், கலந்துரையாடுவதற்கு என்றே பிரத்யேக கூடம், படுக்கை அறை என சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

யார்? யார்?

Force One ரயிலில் பிரதமர் மோடிக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ் ஆகியோர் உக்ரைன் சென்றுள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு என்றே 10 ஆண்டுக்கு முன்பு இந்த ரயில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் போர்க்கள பூமியாக உக்ரைன் நாடு மாறி உள்ள நிலையில், அங்கு வி.வி.ஐ.பி.க்கள் செல்வதற்காக பயன்படுத்தப்படும் ரயிலாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sivagiri
ஆக 23, 2024 12:54

வயிறு எரியூது . . . தமிழ்நாட்ல மக்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சிட கூடாது-ன்னு மீடியாக்கள் மிகவும் கவனமாக இருக்கின்றன


Ramesh Sargam
ஆக 23, 2024 11:58

பாரத பிரதமர் மோடிக்கு செல்கிற இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு. இது ராகுல் போன்ற எதிர்கட்சியினருக்கு வயிற்று கடுப்பு.


Velan Iyengaar
ஆக 23, 2024 11:23

ஒன்றிய அளவுல வாழ்வு வாழறாங்க அரசு நிற்குமோ நிக்காது என்ற பயத்துல அவசரகதியில் எல்லாத்தையும் அனுபவிக்க துடிப்பது தெள்ள தெளிவா தெரியுது


Ramanujadasan
ஆக 23, 2024 12:33

பரமார்த்த குருவின் சீடருக்கு மட்டுமே தெள்ள தெளிவாக தெரியும் விஷயம் இது


Almighty
ஆக 23, 2024 13:13

உனக்கெல்லாம் saric comment எந்த விசயங்களுக்கு எழுத வேண்டும் என்ற விவஸ்தையே கிடையாதா? நமது நாட்டின் அடையாளமாக எந்த கட்சியை சார்ந்த எந்த ஒரு தலைவர் சென்றாலும் அங்கு நமது நாட்டிற்கு என்ன கிடைக்கின்றது என்பதை பார்க்க, எற்றுக் கொள்ள கற்றுக்கொள். அப்படி ஒரு கலாச்சாரம் இங்கு இருந்தது. அரசியல் கட்சிகளின் குறுகிய நோக்கத்திற்கான ஓட்டு வங்கி தேவையில் உங்களை போன்றோர் உபயோகப்படுத்தப்பட்டு மக்களின் நற்பண்புகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.


subramanian
ஆக 23, 2024 14:58

உன்னை பலர் ....


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ