உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் தேசபக்தர்; அமித்ஷா யாரைச் சொல்றார்னு பாருங்க!

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் தேசபக்தர்; அமித்ஷா யாரைச் சொல்றார்னு பாருங்க!

புதுடில்லி: '23 ஆண்டுகால பொது வாழ்வை பிரதமர் மோடி நிறைவு செய்துள்ளார். நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தேசபக்தர் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.இது குறித்து, சமூகவலைதளத்தில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று பிரதமர் மோடி முதல்வராகவும், பிரதமராகவும் 23 ஆண்டுகள் பொது வாழ்வில் நிறைவு செய்துள்ளார். ஒரு நபர் தனது முழு வாழ்க்கையையும் தேச நலன் மற்றும் பொது சேவைக்காக எவ்வாறு அர்ப்பணிக்க முடியும். இந்த 23 ஆண்டு கால சாதனை,தனித்துவமான அர்ப்பணிப்பின் அடையாளமாகும். மோடியின் இந்த சாதனைக்கு நான் சாட்சியாக இருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

தேசபக்தர்

ஏழைகள் நலன், மேம்பாடு, தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அடையாளத்தை வலுப்படுத்துதல் போன்ற பணிகளை எவ்வாறு செய்ய முடியும் என்பதை மோடி செய்து காட்டினார். பிரச்னைகளை துண்டு துண்டாகப் பார்க்காமல், நாட்டிற்கு ஒரு முழுமையான தீர்வை அளித்தார். தன்னைப் பற்றி கவலைப்படாமல், நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தேசபக்தர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lakshminarasimhan
அக் 07, 2024 20:56

திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் ஸ்டாலின் பொய் முட்டைகளைவிடவா இது


K.n. Dhasarathan
அக் 07, 2024 14:18

அமித் ஷா அவர்களின் வழக்கமான பொய் மூட்டைகளில் இதுவும் ஒன்று, ஒரே ஓரூ கேள்வி, இந்த தேச பக்த பிரதமர் தனியாக பி.ம். பாண்ட் வைத்திருக்கிறார், எந்த தணிக்கையும் இல்லாமல், கணக்கும் இல்லாமல், வெள்ளை அறிக்கை இல்லாமல், எதற்கு ? ஏதாவது கோயில் உண்டியலில் போடுவாரா ? நீங்கள் சோல்லா முடியுமா ? அல்லது எல்லாவற்றிற்கும் ஜால்ரா போடும் நிதி அமைச்சர் சொல்வாரா? இது அவர் செய்யும் பல அர்ப்பணிப்புகளில், கோடியில், ஒன்று, தயவு செய்து பதில் சொல்லுங்கள்.


Kannan
அக் 07, 2024 14:17

வாழ்த்துக்கள்


Kandhavel
அக் 07, 2024 13:48

நாங்களும் தான் பெருமை படுகிறோம் இந்த காலத்தில் வாழ்வதற்கு .தமிழகத்திலும் ஒருவர் வந்தால் மட்டுமே தமிழன் வாழமுடியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை