உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்: திட்டமிடும் பணி நடப்பதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்: திட்டமிடும் பணி நடப்பதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடில்லி: பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் பணி இரு தரப்பிலும் நடப்பதாக வெளியறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறை பதவியேற்றது முதல் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். உலகின் முன்னணி நாடுகளின் அதிபர்களுடன் போனில் உரையாடியும் வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி, விரைவில் அமெரிக்கா வர இருப்பதாக 2 நாட்களுக்கு முன் டிரம்ப் அறிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g0km8qev&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:பிரதமரின் அமெரிக்க பயணத்திற்கான தேதிகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் சில நாட்களுக்கு முன் போனில் உரையாடினர். அப்போது பிரதமர் மோடியுடன் பயனுள்ள' உரையாடல் நடத்தியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.இந்தோ-பசிபிக் குவாட் கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்த ஆண்டு இறுதியில் இந்தியா முதல் முறையாக குவாட் மாநாட்டை நடத்துகிறது.மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனின் நிலைமை உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். உலக அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் முன்கூட்டியே நடப்பதற்கு இரு தரப்பிலும் தீவிர பணி நடந்துவருகிறது.இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
பிப் 01, 2025 09:04

விரைவில் புதுரக ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படும் என்று பொருள் கொள்க. டாரிஃப் உயர்வதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை.


guna
பிப் 01, 2025 12:06

டாஸ்மாக் மட்டைகளுகு நாட்டின் மீது மரியாதை வைக்க தெரியவில்லை...பொழுதிற்கும் கிண்டல்..கேடுகெட்ட கும்பல்


அப்பாவி
பிப் 01, 2025 09:02

எங்க கிட்டேயிருந்து தளவாடம் வாங்கி வியாபார சர்ப்ளசை சமன் செய்ய வேண்டும் இல்லை குறைக்க வேண்டும். இல்லேன்னா டாரிஃபை கூட்டி சரி செய்வோம் என்கிறது அமெரிக்கா. எத்தனை நாள்தான் நாமளும் உருவிக்கிட்டே இருக்க முடியும். சீனாவுக்கும் அதே கதிதான். ஜப்பான், ஐரோப்பிய, ஆசிய, ஆப்ப்ரிக்க நாடுகளுக்கும் அதே கதிதான்.


தாமரை மலர்கிறது
ஜன 31, 2025 21:57

தொழிற்சாலைகளை கைவிட்ட அமெரிக்கா கடைசி கட்டத்தில் இருக்கும் இடத்தை தக்கவைக்க போராடி கொண்டிருக்கிறது. ஆனால் ட்ரம்ப் என்னதான் கதறினாலும், புலம்பினாலும், மிரட்டினாலும், ஒன்றும் நடக்கபோவதில்லை. அமெரிக்கா ஒரு மூழ்கும் டைட்டானிக். எலிகள் வெளியே ஓட துவங்கிவிட்டன. சீனாவின் ஒரு எலிக்குஞ்சு கம்பெனி அமெரிக்காவின் கப்பலில் ஒரு ட்ரில்லியன் டாலருக்கு ஓட்டை போட்டுவிட்டது. வெறும் ஏஐ வைத்து உலகை ஆளலாம் என்று கனவுகண்ட அமெரிக்காவின் கனவு பணால் ஆகிபோனது. இனி இந்தியாவே ஒரு அதிசிறந்த ஏஐ மாடல் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.


sankaranarayanan
ஜன 31, 2025 21:03

அந்த நாள் ஞாபகம் வந்ததே வந்ததே ........என்று இருவரும் கூடி குலாவி பேசிக் கொள்வாரகள் இந்த சந்திப்பினால் இந்திய அமெரிக்க உறவு மேலும் உயரும் நல்லதாகவே முடியும் இந்திய பொருளாதாரம் நன்றாக அமையும் மோடிக்கு உலகில் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு உண்டு அமெரிக்க உறவும் ரஷ்ய உறவும் மற்ற தேசங்களுக்கிடையேயான உறவும் மேலும் மேலும் உயரும்


சண்முகம்
ஜன 31, 2025 20:13

8 லட்சம் கள்ளக் குடியேறிய இந்தியர்கள் பற்றி பேசுவீர்களா?


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
பிப் 01, 2025 08:58

பாரத நாட்டுக்கு படை எடுத்து வந்தவர்களுக்கு பிறந்தவர்கள் அமெரிக்காவில் உள்ள கள்ள குடியேறிகளை பற்றி பேசுவதுதான் விந்தையான விஷயம். ஒரிஜினல் இந்தியன் இப்படியொரு கருத்தை பதிவிட மாட்டான்.