உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் பேச்சு : இந்தியா வர அழைப்பு

ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் பேச்சு : இந்தியா வர அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா வருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார்.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்காக இந்தியாவுக்கு வரியும், அபராத வரியும் விதித்துள்ளார். இந்த விவகாரம், சர்வதேச அளவில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ascnqs0l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இத்தகைய சூழ்நிலையில், இந்திய பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் இன்று போனில் பேசினர். உக்ரைன் மோதல் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் குறித்து மோடியிடம் புடின் விளக்கினார். இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்த பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துக்கூறினார்.இரு தரப்பு உறவு குறித்து கலந்துரையாடிய இருவரும், இதனை இன்னும் வலுப்படுத்துவது என அப்போது உறுதி பூண்டனர். அப்போது இந்தியா - ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வருமாறு புடினுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மகிழ்ச்சி

https://x.com/narramodi/status/1953804374158840158 இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: எனது நண்பர் புடினுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். உக்ரைன் தொடர்பான சமீபத்திய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இரு தரப்பு உறவுகள் குறித்து கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்தாண்டு இந்தியா வரும் அதிபர் புடினை வரவேற்பதில் ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.

சீன அதிபருடன் புடின் பேச்சு

இதனிடையே , சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் புடின் ஆலோசனை நடத்தினார். அப்போது, உக்ரைன் நிலவரம் குறித்தும், ரஷ்யா - அமெரிக்கா இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்தும் புடின் விளக்கி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

saravanan
ஆக 08, 2025 21:02

இந்திய-ரஷ்ய நட்புறவு என்பது ஆழமாக வேறுன்றியது. அனுபவ பூர்வமானது. நமது துயர காலத்தில் உடனிருந்து தோள் கொடுத்த நாடு ரஷ்யா ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை என்பதற்கு சிறந்த உதாரணம் ரஷ்யா அமெரிக்கா எந்த காலகட்டத்திலும் தம்பட்டம் அடிப்பதிலும் குறைந்ததில்லை என்றாலும் டிரம்ப் அதிபரான பிறகு அது வேறு அளவை எட்டி கொண்டிருக்கிறது ஆணவத்திற்கு அடிபணியதே தமபிப்பயலே என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப டிரம்பின் பூச்சான்டிகளுக்கு பிரதமர் மோடி அவர்களின் செயல்பாடுகளும், பதிலடிகளும் கண்டிப்பாக அமையும் என்று உறுதியாக நம்பலாம்.


ASIATIC RAMESH
ஆக 08, 2025 19:38

சபாஷ்.. அப்படியே ரஷ்யா பாக்கியில் செய்யும் முதலீடுகளையும் குறைக்கச் சொல்லவும்.... பிரிக்ஸ் நாடுகள் ஒன்று சேர்ந்து விரைவில் டாலருக்கு பதில் பொது கரன்சியை அறிமுகம் செய்து பயன்படுத்தினாலே போதும்.... இதில் தாமதமும் சமரசமும் வேண்டாம். ஒரு புதிய பொருளாதார புரட்சி/மாற்றம் ஏற்படும்... போட்டிக்கு ஒரு சக்திவாய்ந்த கரன்சி இருந்தால்தான் ஒரு கட்டுப்பாடு வரும்... அதை செயல்படுத்த இதுதான் சரியான நேரம். பெரும்பாலான நாடுகள் கண்டிப்பாக ஆதரவு தரும்...


Ramesh Sargam
ஆக 08, 2025 19:21

ரஷ்யா அதிபர் இந்திய வருகை. இந்தியா பிரதமர் சீனா பயணம். பிரேசில் அதிபர், நான் இந்திய பிரதமர் மோடியுடன் பேசுவேன் தவிர, அமெரிக்க வரி பயித்தியத்துடன் பேசமாட்டேன். இதிலிருந்து என்ன தெரிகிறது, ட்ரம்ப் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுவிட்டார் என்றல்லவா.


சமீபத்திய செய்தி