உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மோடி அறிவிப்பார்: உறுதியாகச் சொல்கிறார் ராகுல்

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மோடி அறிவிப்பார்: உறுதியாகச் சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக பிரதமர் மோடி அறிவிப்பார்' என சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் பதிவிட்டுள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு இன்று (ஆகஸ்ட் 10) நேரில் சென்று, பிரதமர் மோடி ஆறுதல் கூற உள்ளார். மதியம் 12.15 மணிக்கு பேரழிவால் பாதிக்கப்பட்ட இடங்களை மோடி பார்வையிடுகிறார். பின்னர் அவர், நிவாரண முகாம் மற்றும் மருத்துவமனையில் இருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மண்ணில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மோடி நேரில் சந்திக்கிறார்.

தேசிய பேரிடர்

இந்நிலையில் எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில், ''பிரதமர் மோடி பயங்கர சோகத்தை நேரில் ஆய்வு செய்ய, வயநாட்டிற்கு வர முடிவு செய்திருப்பதற்கு நன்றி. இது ஒரு நல்ல முடிவு. அவர் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பார்'' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ganapathy
ஆக 10, 2024 11:09

இந்த கேடுகெட்ட ஈனப்பிறவிக்கு இந்துக்களின் பிணம் ஒரு பொருட்டல்ல.


ganapathy
ஆக 10, 2024 11:07

அதுல பேர்வாங்கி ஸ்டிக்கர் ஒட்டணும்....அசிங்கமா இல்ல உனக்கு? அது சரி நீதான் தொகுதி மாறி ஓடிப்போயிட்ட...வயநாடு பத்தி எதுக்கு கவலை உனக்கு? நேபரேலில சாக்கடை தேங்குது. அதன்படி கவனி மொதல்ல.


Swaminathan L
ஆக 10, 2024 10:39

இது மோடியைச் சீட்டில் பார்க்கும், வயநாடு மக்களைத் தூண்டி விடும் வேலை. வயநாடு நிகழ்வு கடுமையானது, மோசமானது, மிகுந்த வருத்தத்தைத் தருவது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 2013 உத்தரகாண்ட் வெள்ளம், 2014 ஹுட்ஹுட் புயல் நிகழ்வுகள் போல அல்ல. மத்திய அரசும் மாநில அரசும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.


M L SRINIVASAN
ஆக 10, 2024 09:36

ஐ நா விடம் சொல்லி உலக பேரிடராக அறிவிக்க ராகுல் பாடுபடவேண்டும் .


இந்துமதி
ஆக 10, 2024 09:13

படத்தைப் பாருங்க. இன்னும் ரெண்டு ஆள் நடந்தா பாலமே உடைஞ்சு விழுந்துரும்.போல. ஒருத்தனுக்கும் பொறுமை இல்லை லேட்டானா கிடைக்கிற சோறும் கிடைக்காது.


skv srinivasankrishnaveni
ஆக 10, 2024 08:15

அப்படி உள்ளவில்லை என்றால் பார்லியமென்ட் ஐ முடக்குவாங்களே போகாமலே சம்பளம் வாங்கி சேர்க்கணும் மக்கள்மீது அவ்ளோகரிசனம்


spr
ஆக 10, 2024 08:04

வயநாட்டு பிரச்சினை தேசிய பேரிடராக அறிவிக்க ஏற்றதல்ல மாநிலைப் பேரிடராக அறிவிக்கலாம். ஆனால், இன்றைய எதிர்க்கட்சிகளின்,அரசியலில் ராகுல் தனது முயற்சியால் வயநாட்டு மக்களுக்கு நல்லது செய்வதாக விளம்பரப் படுத்த இது பெரிதும் பயன்படும் மாநிலப் பேரிடராக அறிவித்தால் மத்திய அரசு நிதி தராது அதுவும் பிரச்சினை "அள்ளிக் கொடுக்க வேண்டிய மோடி கிள்ளிக்கூடக் கொடுக்கவில்லை" என ஸ்டாலின் பேசலாம் இதுதான் மோடியின் இன்றைய நிலை அவருக்காக அவரை காரணமின்றிக் கிண்டலடித்துக் கேலி செய்யும் ராகூல் ஏறக்குறைய "அரசாள்வார் ஆணை நமதே" என்ற பாணியில் சொல்வது.என்ன செய்வது ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்


மோகனசுந்தரம்
ஆக 10, 2024 07:43

பப்பு மறுபடியும் மறுபடியும் அவன் ஒரு.......... என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறான். தேசிய பேரிடர் என்று ஒன்றுமே கிடையாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடந்ததை போய் எப்படி தேசிய பேரிடர் என்று கூற முடியும். இவன் எல்லாம் ஆட்சிக்கு வந்த என்ன செய்யப் போகிறானோ தெரியவில்லை.


Svs Yaadum oore
ஆக 10, 2024 07:31

வய நாடு தேசிய பேரிடர் என்று அறிவிக்கனுமாம் ...பங்களாதேஷ் ஹிந்துக்கள் மீது கடும் வன்முறை..அதை தேசிய பேரிடர் என்று அறிவிக்க காண் கிராஸ் டெல்லி இத்தாலி அறிக்கை விடட்டும் ......அதற்கு யாரும் வாய் திறக்கவில்லை .....


Svs Yaadum oore
ஆக 10, 2024 07:21

25 வருடமாக கேரள மாநிலத்து மருத்துவ கழிவை தமிழ் நாட்டில் கொண்டுவந்து கொட்றான் ...அதை கேட்க வக்கில்லை ....ஆனால் காங்கிரஸ் டெல்லி இத்தாலிக்கு வய நாடு தேசிய பேரிடர் என்று அறிவிக்கனுமாம் ....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை